அரசியல் ஆய்வு மையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் கட்சிகள் பெறும் ஆசனங்கள் -விபரம்



அபு அலா -

மகால அரசியல் நல்லாட்சிக்கான தேர்தல் சம்பந்தமாக இலங்கை வாழ் சகல பிரதேசங்களிலும் புதிய அரசியல் சீர் திருத்தமும் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் சம்பந்தமாக எமது மையம் மேற்கொண்டுள்ள ஆரம்ப ஆய்வுகளின்; அடிப்படையில், நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றிலேயே பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் குறிப்பாக சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கை அமையப்போகின்றது.

அமையப்போகின்ற புதிய பாராளுமன்றத்தில் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளில் பாரிய தாக்கத்தை செலுத்துவதுடன் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் தெரிவு செய்யப்படுகின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி ஏற்படுவதுடன் குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினரின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையின் தாக்கம் காரணமாக பெரும்பான்மை இனத்தவரின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பாரிய தாக்கம் (அதிகரிப்பு) செலுத்துத்தவுள்ளது.

தற்போதைய சமகால அரசியல் நோக்கை முன்வைத்து நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில்,

மேற்குறிப்பிடப்பட்ட கட்சிகள் இந்த அடிப்படையில் தங்கள் ஆசணங்களை பெற்றுக்கொள்ளவுள்ளது.

அதிகூடிய மக்கள் பிரதிநிதிகளைப் பெரும் கட்சியாக UNP (UNF) கூட்டணி பெற்று ஆட்சியமைக்கும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளது.

இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு புதிய அரசாங்கம் ஜனவரி 9 ஆம் திகதி ஆட்சியமைத்த காலமுதல் பொதுத் தேர்தலுக்கான அறிவித்தல் அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை நடாத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் அதிகமுள்ளது.


இப்பெறுபேறு, பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளின் படி சிறுசிறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணம் தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட்டபோது,

முஸ்லிம் அரசியல் கட்சிகள் கடந்தகால மக்கள் பிரதிநிதிகள் சம்பந்தமாகவும், குறிப்பாக ளுடுஆஊ மற்றும் யுஊஆஊ போன்ற முஸ்லிம் கட்சிகள் பற்றி மிக தீர்க்கமான முடிவுகள் எடுக்கும் குழப்பநிலைக்கு மத்தியிpல் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கிழக்கு மாகாணம் (அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை) முழுவதும் 6 - 7 முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ள வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகின்றது. மு.காவின் தலைமைத்துவம் UNP (UNF) உடன் சேர்ந்து பொதுத் தேர்தலை முகம் கொடுக்கின்ற சனாக்கிய முடிவு ஒரு தீர்க்க தரிசனமான சனாக்கிய முடிவுமாகவும், மு.காவின் வாக்கு வங்கியில் தற்போது ஏற்பட்டுள்ள சரிவு இதன் மூலம் ஓரளவு சரி செய்யப்பட்டாலும், நீண்ட காலமாக மக்கள் பிரதிநிதிகளை கொண்டிருதா சாய்தமருது, அட்டாளைச்சேனை, பொத்துவில் போன்ற பிரதேசங்களில் மு.காவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட யுஊஆஊ இன் வருகை காரணமாகவும், தொடர்ச்சியாக மக்களின் எதிர்பார்ப்புக்கள் கடந்த காலங்களில் முழுமையாக நிறைவேற்றப்படமை காரணமாகவும் UNP (UNF) ூ ளுடுஆஊ சேர்ந்து உருவாக்கப்பட்ட UNP (UNF) சார்பான கூட்டணியில் UNP (UNF) சார்பான முஸ்லிம் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டதன் காரணமாகவும் தெரிவும் செய்யப்படும் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவடைவதற்கான சாத்தியப்பாடு அதிகம் காணப்படுகின்றது.

இவற்றை தீர்ப்பதற்குறிய சிறந்த அரசியல் முன்னெடுப்புக்கள் மேற்கொள்வதன் மூலம் ஈடு செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதுடன் அம்பாறை மாவட்டம் அதிகூடிய முஸ்லிம் பிரநிதிகள் - 04 பெறக்கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்தி அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் இருக்கையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

புதுப்புது மாற்றம் புதிய இளம் வேட்பாளர்கள் அறிமுகமும், மக்களின் தேவைகளை உணர்ந்து செயற்படும் நபர்கள், கல்விசார் மற்றும் சிறந்த ஆற்றலுள்ள நபர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்குதல் மற்றும் ஆத்மீகம், சுலநலமற்ற நல்ல மனப்பாங்குள்ள புதிய மக்கள் பிரதிநிதிகளை முஸ்லிம் அரசியல் கட்சிகள் எதிர்காலத்தில் கருத்திற்கொள்வது சிறுபான்மை சமூகத்தின் அரசியல் வளர்சிக்கு பாரிய உரம் ஊட்டுவதாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமங்களில் ஆராயப்பட்ட ஆய்வின் அடிப்படையில், பின்வரும் தமிழ், முஸ்லிம், சிங்கள கட்சிகள் பெறும் வாக்குகளின் எண்ணிக்கையை எதிர்வு கூறக் கூடியதாகவுள்ளது. இது மாவட்டத்தில் அளிக்கப்படும் வாக்குளின் வீதம் சராசரி 70 வீதத்துக்கு உட்படுத்தப்பட்டு இத்தரவு தரப்பட்டுள்ளது.

ACMC யின் அரசியல் முன்னெடுப்புக்கள் தீவிரமாக்கப்படும் சந்தர்ப்பத்தில் UPFA, SLMC + UNP (UNF) கட்சிகள் பெற்றுக்கொள்ளவிருக்கும் ஆசணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்

ACMC யின் தேர்தல் நடவடிக்கைகளும், மக்கள்முன் கொண்டுசெல்லப்படுகின்ற கருத்துக்களின் அடிப்படையில் ஒரு பிரதிநிதித்துவத்தை பெறலாம் என்ற எதிர்பார்ப்பை முன்னெடுக்கமுடியும்.

அம்பாறை மாவட்டத்தில் மு.காவின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டிருப்பதுடன் எதர்கால அரசியல் சம்பந்தமாக மு.காவின் தலைமை முன்னெடுக்கும் செயற்பாட்டின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படுகின்ற உச்சகட்ட ஆசணங்களை பெறமுடியும். அல்லது ஏற்கெனவே பெற்ற ஆசணத்துடன் அரசியல் நகர்வுகள் முக்னெடுக்கப்படலாம்.

அத்துடன் புதிய சீர் திருத்தங்களும் மாற்றங்களும் இளம் திறமைமிக்க தியாக சிந்தனையுள்ள கட்சியின் கட்டுக்கோப்புக்கும் சமூக கரிசனையுள்ள இத்தேர்தலானது சிறுபான்மை இன கட்சிகளுக்கு குறிப்பாக முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு பெரும் சவாலாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ற வகையில் மு.காவின் தலைமை சிலவற்றை சீர்செய்யவேண்டிய கடமைக்கு மத்தியில் உள்ளது.

மு.காவினால் புறக்கணிக்கப்பட்ட தீவிர ஆரம்ப கட்சி ஆதரவாளர்களை ஆரவனைப்பதுடன், புதிதாக கட்சியில் உள்வாக்கப்பட்டவர்களை மட்டும் முதன்மைப் படுத்தாமலும், சமச்சீரான அரசியல் பங்கீடுகைளை கிராமங்களுக்கு தேவை அடிப்படையில் வழங்குதவன் மூலமும் இக்கட்சியில் ஏற்பட்டிருக்கும் சிறு சரிவை சரி செய்து தேசிய அரசியலில் அம்பாறை மாவட்டத்தினள் முதன்மை வெற்றியை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.


எமது ஆய்வு மையம் இப்பொதுத் தேர்தல் சம்பந்தமாக தீவிர கவனம் செலுத்ததுவதுடன் முஸ்லிம்களின் அரசியல் பொருளாதாரம் சம்பந்தாமாகவும் பொதுத் தேர்தல் நடவடிக்கை ஆரம்பித்து தேர்தல் நடைபெறுவதற்கு இடைப்பட்ட காலத்தில் மீண்டும் ஓர் ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதுடன் இம்மாவட்டத்தின் உன்மையான பிரதிநிதிகளின் எண்ணிக்கையின் உன்மைத்தன்மையை மீண்டும் பெற்றுக்கொண்டு தெளிவு படுத்தவுள்ளோம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட சிறுபான்மை முஸ்லிம் கட்சிகளின் தலைமைத்துவங்கள், தங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வை கவனத்திற் கொண்டு தீவிர பரீசிலனை செய்வதன் மூலம் தங்களின் கட்சிக்கு அதிகூடிய மக்கள் பிரதிநிதிகளை பெரும் வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

அத்துடன் சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் போன்ற பிரதேசங்களை கருத்திற் கொண்டு இத்தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் UNP (UNF) கூட்டில் களம் இறக்கப்பட்டிருப்பின் முஸ்லிம்களுக்கான கூட்டை வெளிக்காட்டுவதுடன் உச்சகட்ட முஸ்லிம் பிரதிநிதிகளை இம்முறை தெரிவு செய்வதன் மூலம் வரலாற்றிலே அதிகூடிய முஸ்லிம் பிரதிநிதிகளை பெற்ற கட்சி என்ற பெருமையை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருக்கமுடியும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மு.காவின் தலைமைத்துவத்தை 90 வீதத்துக்கு அதிகமான இந்நாட்டு முஸ்லிம்கள் அங்கிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மு.காவின் தலைமைத்துவம் 20 ஆவது அரசியல் சீர் திருத்தத்தில் முக்கிய பாத்திரத்தில் செயற்பட்டதன் காரணத்தினால் இலங்கை அரசியலில் சிறுபான்மை மக்களின் பலம் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நல்ல செயற்திட்டங்களை மேற்கொண்ட கட்சியில் கிழக்கு மாகாண சபை ஆட்சியில் மு.காவின் பிரதிநிதி ஒருவரை முதலாவது முஸ்லிம் முதலமைச்சரகா நியமித்து அதன் மூலம் முஸ்லிம்களின் பாரம்பரிய வாழ்விடத்தை உறுதிப்படுத்துவதுடன் எதிர்கால அரசியல் தீர்வு பெறுகின்றபோது அது உறுதிப்படுத்தியுள்ளது.

மு.காவின் தலைமைத்துவம் சிறந்த ஆழுமைமிக்கதாக பலம் பெற்று பல அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும் கட்சியின் வெளிப்படையான அரசியல் பங்கீடுகள் கிராமங்களுக்கு பரவலாக்கப்படவேண்டிய தேவை நடைபெறவிருக்கும் இந்த பொதுத்தேர்தல் முடிவுகள் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எமது ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.

நடைபெறவிருக்கும் சிறுபான்மை சமூகமாகிய தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் கட்சியான கூட்டணியின் சிந்தனை மாற்றத்தின் காரணமாக இத்தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாக இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

எனவே, தேசிய அரசியலா? அல்லது பிராந்திய அரசியலா? எவ்வாறு அமையப்போகின்றது என்பதை எதிர்வரும் பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தாக்கத்தை செலுத்தும்.

அத்துடன் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் ஆசணங்களின் எண்ணிக்கையின் தெரிவு தேசிய அரசியலில் பாதிப்பைச் செலுத்தி முஸ்லிம்களின் தனித்துவத்தை பாதிக்கும் அபாயம் ஏற்படலாம்.

குறிப்பாக UPFAஅரசியலில் கடந்தகால கசப்பு, இன சுத்திகரிப்பு அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றம் புதிய அரசியல் நல்லாட்சி அரச சிந்தனை தற்போது ஜனாதிபதி செயற்படும் விதம் என்பனவற்றை கருத்திற்கொண்டு மாற்றுக் கட்சிகளுக்கு அளிக்கப்படுகின்ற குறிப்பாக ருPகுயு வாக்குகள் மற்றும் UNP (UNF) பொரும்பான்மை சமுகத்துக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகள் எமது அரசியல் பலத்துக்கு மேலும் முஸ்லிம்களின் அரசியல் சக்தியை பலயீனப்படுத்துவதாக அமையலாம்.

இலங்கை முஸ்லிம்களின் சமூக, கல்வி மற்றும் அரசியல் ஆய்வு மையம்  (MSEPRO), அமைப்பினால் ஆய்வு செய்யப்பட்ட நல்லாட்சி அரசியலில், முஸ்லிம் பிரதிநிதித்துவம் மற்றும் பொதுத் தேர்தல் - 2015 பற்றிய ஆய்வுக் கட்டுரை
இலங்கை முஸ்லிம்களின் சமூக, கல்வி மற்றும் அரசியல் ஆய்வு மையம் 

(ஆளுநுPசுழு), அமைப்பினால் ஆய்வு செய்யப்பட்ட நல்லாட்சி அரசியலில், 

முஸ்லிம் பிரதிநிதித்துவம் மற்றும் பொதுத் தேர்தல் - 2015 பற்றிய 
ஆய்வுக் கட்டுரை
பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பரினால் 
மேற்கொள்ளப்பட்ட ஆய்வு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -