சுதந்திர இலங்கையும் இனவாத தேசியக்கொடியும்! இதன் காரணம்தான் என்ன -வீடியோ விபரமாக


க்கிய இராச்சியத்திடமிருந்து இலங்கை விடுதலை அடையும் வேளையில் இலங்கைக்கு நாட்டு கொடிக்கான தேவை ஏற்பட்டது. அதுவரை பிரித்தானிய ஒன்றியக் கொடியே இலங்கை கொடியாக இருந்து வந்தது. விடுதலையின் போது இலங்கையின் பிரதமராக இருந்த டி. எஸ். சேனாநாயக்க இலங்கையின் கடைசி இராச்சியமான கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் சிறி விக்கிரம ராஜசிங்கனின் சிவப்பு நிறப் பிண்ணணியில் மஞ்சள் நிற போர்வாளேந்திய சிங்கக்கொடியானது சுதந்திர இலங்கையை குறிக்கும் சிறந்த கொடியாக அமையும் என தேர்வு செய்தார். எனினும் அக் கொடியில் தங்கள் இனத்துவங்களை பிரதிபலிக்கும் அடையாளங்கள் ஏற்படுத்த வேண்டும் என தமிழ், முஸ்லிம் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.

சில நாட்களின் பின் தேசிய கொடியில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, ஜீ. ஜீ. பொன்னம்பலம், ஜே.எல். கொத்தலாவல, டி.பி. ஜாயா, எல்.ஏ. ராஜபக்ச, எஸ். நடேசன், ஜே. ஆர். ஜயவர்தன என்போர் அடங்கிய நாடாளுமன்றக்குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைக்கமைய தேசிய கொடியில் சமஅளவு அகலம் கொண்ட மஞ்சள், பச்சை நிறமான இரண்டு நிலைகுத்தான பட்டைகள் உருவாக்கப்பட்டது. இதில் பச்சை முஸ்லிம் இனத்தையும், மஞ்சள் தமிழரையும் குறிக்கும்.அத்துடன் பௌத்த மதத்தைக் குறிக்கும் வகையில் நான்கு அரசிலைகள் கொடியின் நான்கு முலைகளிலும் இணைக்கப்பட்டது. இக்கொடியே தற்போது இலங்கையில் பயன்பாட்டில் உள்ளது.

இலங்கையில் தற்போது பயன்பாட்டில் உள்ள தேசியக்கொடியில் உள்ள சகோதரத்துவம் மற்றும் மரியாதை என்பவற்றுக்கான பச்சை மற்றும் மஞ்சள் நிற பட்டைகளை அகற்றி திரிவுபடுத்திய கொடியை ஏற்ற முயல்கிறது இனவாத அமைப்பு போதுபல சேனா. அதனுடன் சேர்ந்த இனத்தீவிரவாத அமைப்பு.

இனத் தீவிரவாத போதுபல சேனா, சிஹல ராவய இதர அமைப்புக்களின் எதிர்பார்ப்புகள்தான் என்ன?

மீண்டும் ஒரு இனக்கலவரத்தை இலங்கைத் திருநாட்டில் தூண்டிவிட மக்கள் மதிக்கும் ஆடைகள் அணிந்த ஆசாமிகள் இதனைச் செய்வதுதான் இன்று கேள்வியாக இருக்கிறது.

நன்றி அனுப்புனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -