கனடாவில் உள்ள பிரின்ஸ் ஜார்ஜ் பகுதியில் உள்ளூர்வாசிகளுக்கு ஹொட்டலில் தங்க அறை வழங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரின்ஸ் ஜார்ஜ் பகுதியில் வசித்து வரும் ஆமி பெஸ்போயன்ஸி என்பவர் தமது பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் அறையை கடந்த யூன் 24 ஆம் திகதி பதிவு செய்திருக்கிறார்.
சம்பவத்தன்று தமது குழந்தைகளுடன் ஹொட்டலுக்கு வந்த ஆமியை அங்குள்ள நிர்வாகி பலமுறை அலைக்கழித்ததாகவும், ஹொட்டல் நிர்வாகம் அறை தர மறுப்பு தெரிவித்ததுடன் அவரை தரக்குறைவாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஆமி தமது குழந்தைகளுடன் அங்கிருந்து சென்றுள்ளார்.
இதுகுறித்து ஆமி கூறியதாவது, இந்த இக்கட்டான சூழ்நிலையை நினைத்து எனது கண்களில் இருந்து கண்ணீர் வந்தது, ஏனெனில் எனக்கு நடந்தவற்றை அனைத்தையும் அங்கிருந்த மற்ற விடுதி காப்பாளர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர்.
என்னுடன் சேர்ந்து எனது குழந்தைகளும் இந்த இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
உள்ளூர்வாசிகள் மது அருந்தி கலாட்டா செயவதால்தான் அவர்களுக்கு அறை வழங்க மறுத்துள்ளதாக ஹொட்டல் நிர்வாகம் விளக்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த தகவல் வெளியே கசிந்ததும் ஹொட்டல் நிர்வாகம் ஆமி Bespoyasny ஐ தொடர்பு கொண்டு மன்னிப்பு கோரியுள்ளது.
மேலும் உள்ளூர்வாசிகளுக்கு இனி கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை எனவும் அந்த ஹொட்டல் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
ஆனாலும் தாம் அந்த ஹொட்டலுக்கு மறுபடியும் செல்லப்போவதில்லை என ஆமி தெரிவித்துள்ளார்.