ஹாசிப் யாஸீன்-
இன்றைய எமது முஸ்லிம் சமூகமும், முஸ்லிம்களின் தேசிய இயக்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்நோக்கும் சவால்களும் அதற்கு இளைஞர்களின் பங்களிப்பு சம்பந்தமாக இளைஞர்களுடனான கருத்துப் பரிமாறல் செயலமர்வு சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் காரியாலயத்தில் இன்று (31) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கல்முனை மாநரக பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ. மஜீத், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்ளாள் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எம்.அன்சில், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகச் செயலாளர் சட்டத்தரணி ஏ.ஏ.கபூர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எம்.பாயிஸ், எம்.எச்.எம்.இஸ்மாயில், தொழிலதிபர் ஷெரீப் ஹக்கீம் உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் முஸ்லிம் சமூகத்திற்கு முஸ்லிம் காங்கிரஸின் வருகையும், அதன் எழுச்சியும், மாமனிதர் எம்.எச்.எம்.அஷரஃபின் தைரியம்,சாணக்கியம்,அரசியல் முதிர்ச்சி, சமூக அக்கறை, அபிவிருத்தி அரசியல் என்பன பற்றியும், தற்போதை தலைவர் ஹக்கீமின் ஆளுமை, தைரியமாக முடிவெடுக்கும் மனநிலை, கட்சியின் எழுச்சிஇ தற்போது அது எதிர்நோக்கும் சவால்கள், கட்சியும் தற்கால இளைஞர்களின் மனநிலை பற்றியும் துறை சார்ந்தவர்களினால் இளைஞர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதில் பெரும் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.சாய்ந்தமருது இளைஞர்கள் மு.காவின்; வீழ்ச்சிக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். எமது கட்சியின் தலைமையினையும் அழித்துவிட இடம்கொடுக்கமாட்டோம் என இதன்போது உறுதியளித்தனர்.