சிறுபான்மை இன மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத தேர்தல் திருத்தச் சட்டமூலம் - புதிய அரசு கொண்டுவரும்

சிறுபான்மை இன மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத-தேர்தல் தொகுதிகளுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய தேர்தல்திருத்தச் சட்டம் நாடாளுமன்றத் தேர்தலின் பின் உருவாகும் ஐக்கிய தேசிய கட்சி அரசால் கொண்டு வரப்படும்என்று அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவ்ப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்காகக் கொண்டுவரப்படவிருந்ததேர்தல் திருத்தச் சட்டமூலம் தம்மால் முறியடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கண்டி கடுகன்னாவையில் நேற்று [30]இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்தவைத் தோற்கடித்து அவரை வீட்டுக்கு அனுப்பிய நாம் முன்னெடுத்த நூறு நாள் வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளது.நாம் வரலாறு காணாத அபிவித்தித் திட்டங்களை முன்னெடுக்கத்திட்டமிட்டுள்ளோம்.

அதிகமான சர்வதேச முதலீடுகள் இலங்கைக்கு வர இருக்கின்றன.உலக நாடுகள் இந்தத் தேர்தலின் முடிவைஎதிர்பார்த்து இருக்கின்றன.நாம் மஹிந்தவைப்போல் சர்வதேச நாடுகளுடன் சண்டை பிடிப்பவர்கள்இல்லை.சர்வதேச நாடுகளுக்கு நாம் அடிபணியாது நற்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

தனது குற்றத்தை மறைப்பதற்காக மஹிந்த அரசு சர்வதேச சதி என்று கூறி மக்களை ஏமாற்றியதுபோல் நாம்எமாற்றமாட்டோம்.எமது சர்வதேச நிலைப்பாடு மிகவும் தெளிவானது வெளிப்படையானது.

இலங்கை தொடர்பாக சர்வதேச நாடுகள் கொண்டிருந்த தப்பான அபிப்பிராயத்தை நாம் இல்லாதுசெய்தோம்.இலங்கையை அந்நாடுகள் மிகவும் கேவலமாகப் பார்த்த அந்தப் பார்வையை நாம் மாற்றினோம்;புதியபார்வையை புகுத்தினோம்;உலகம் முழுவதும் இலங்கை தொடர்பில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தினோம்.

மஹிந்தவின் ஆட்சியில் அதிக வட்டிக்கு நிதி வழங்கிய நாடுகள் இப்போது குறைந்த வட்டியில் எமக்கு கடன்வழங்க உடன்பட்டுள்ளன.

இந்த நாட்டு மக்களுக்குப் பூரண சுதந்திரம் வழங்கினோம்.ஊழல்,மோசடிக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் தேர்தல்முறைமையை மாற்றுவதற்கு சுதந்திரக் கட்சியினர் முயன்றனர்.அந்த முயற்சியை நாம் தோற்கடித்தோம்.

உதயமாகும் எமது புதிய அரசு தேர்தல் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வரும் .அனால்,அது சிறுபான்மை இனமக்களைப் பாதுகாப்பதாகவும்-தேர்தல் தொகுதிகளுக்குப் பொறுப்புக் கூறுவதாகவும் அமையும்.ஒருபோதும்ஒருசிலரின் நலன்களை பாதுகாப்பதற்காக் கொண்டு வரப்படாது.

ஊழல்,மோசடிகளை இல்லாதொழிப்பதற்காக தகவல் அறியும் சட்டமூலம் கொண்டு வரப்படுவதுஅவசியம்.அதற்கான ஏற்பாடுகளையும் எமது புதிய அரசு செய்யும்.

இவ்வாறான ஒரு ஜனநாயகமிக்க-நேர்மைமிக்க-வெளிப்படையான-மக்கள்நேய-ஊழல்,மோசடியற்ற அரசைஉருவாக்குவது இந்த நாட்டு மக்கள் அனைவரினதும் கடமையாகும்.அந்தக் கடமையை நாம் அனைவரும்ஒன்றிணைந்து செய்ய முன்வர வேண்டும்

இனிமேலும்,இந்த நாட்டில் இனங்களிடையே கசப்புணர்வை வளர்க்கும்-மக்களைப் பலிக்கடாக்களாக மாற்றிஅரசியல் செய்யும் சக்திகளைத் தோற்கடித்து புதியதொரு நாட்டைக் கட்டியெழுப்புவோம்.-என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -