”குறை நிச்சயம் நிவர்த்தி செய்யப்படும்” அட்டாளைச்சேனை எம்.பி தொடர்பில் சட்டத்தரணி கபூர்

திர் வரும் பொதுத் தேர்தலில்; திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களான எச்.எம்.எம். ஹரீஸ், ஐ.எம்.எம்.மன்சூர், பைசால்காசீம் ஆகியோர்களை ஆதரித்து அட்டாளைச்சேனையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகச் பொது செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் தனது உரையில் தெரிவித்ததாவது: 

இப்பொழுதெல்லாம் நடைபெறும் தேர்தல் பிரச்சார மேடைகளில் அதிகமாக அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் MP தொடர்பாக பலரும் பல்வேறு விளக்கங்களையும், வியாக்கியானங்களையும் வழங்கி புதுப்புது எதிர்பார்ப்புகளையும் கொண்டவர்களாக சிலர் காணப்படுகின்றார்கள். 

ஆனால் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின் முதன்முதலாவது வந்த பொதுத் தேர்தலில் (1989) ஆம் ஆண்டு மு.கா. வினால் சமர்பிக்கப்பட்ட தேசியப்பட்டியலில் முதன்மையாளராக இடம் பெற்ற பெயர் இவ்வூர் மண்னைப் பிறப்பிடமாகக் கொன்ட ஒருவர்தான் அடியேன் என்பதை பலருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.

அதன் பின்பும் வந்த எல்லா பொதுத்தேர்தல்களிலும் என்னுடைய பெயர்தான் தொடரந்து இதுவரையும் இடம் பெற்று வந்துள்ளன. என்ற உண்மை இன்று எம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்கு தெரியாது. 

பல் வேறு சந்தர்ப்பங்களில் ஒரு சில காரணங்களுக்காக அவை இந்த அட்டாளைச்சேனை மண்ணுக்கு கிடைக்க வில்லை மாறாக மற்றவர்களுக்கும் ஏனைய முக்கிய ஊர்களுக்கும் வழங்கப்பட்டு வந்துள்ளன. 

இது எமது மக்கள் மத்தியில் பெரும் குறையாக இன்றுவரையும் காணப்படுகின்றது. இன்ஸா அல்லாஹ் எதிர் வரும் தேர்தலின் பின்பு அந்தக் குறை நிச்சயம் நிவர்த்தி செய்யப்படும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.  
இவை தொடர்பாக எமது கட்சித் தலைவரும் மான்புமிகு அமைச்சருமான ரவூப் ஹக்கிம் அவர்கள் நீதியானதும் நியாயமானதுமான ஒரு முடிவை அறிவிப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -