கட்சி மாற வேண்டிய எந்தத் தேவையும் முன்னாள் அமைச்சர் பஷீர்சேகுதாவூதிற்கு கிடையாது என முன்னாள் அமைச்சரின் காத்தான்குடி இணைப்பாளர் அல்ஹாஜ் ஆயுழுஆயு MAOMA(அஸீஸ்) தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த சில வாரங்களாக முகநூல்களிலும், இணையத்தளங்களிலும் ஏன் சில அரசியல் கூட்டங்களிலும் பரபரப்பாக பேசப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர், முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் பஷீர் சேகுதாவூத் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் சகோதரர் கௌரவ ஆடுயுஆ ஹிஸ்புள்ளாஹ் அவர்களை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக அவரது புகைப்படத்துடன் வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை. அது ஒரு அப்பட்டமான பொய்யான செய்தியாகும் இது அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ள அரசியல்வாதிகளால் பரப்பப்படுகின்ற ஒரு கட்டுக்கதையுமாகும்.
கௌரவ முன்னாள் அமைச்சர் பஷீர்சேகுதாவூத் அவர்கள் நாட்டுக்கு வெளியில் வெளிநாடு ஒன்றுக்கு விஜயமென்றை மேற்கோண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயண்படுத்தி இவ்வாரான பொய் பிரச்சாரங்களை செய்து தேர்தலில் வெற்றியீட்ட எத்தனித்து வருகின்றனர்.
அவர்களது கனவு ஒருபோதும் நிறைவேறாது குறித்த விடயம் சம்மந்தமாக அவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது மேற்படி சம்பவம் உண்மைக்கு புறம்பானது எனவும் நான் மரணிக்கும் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவுள்ளதாகவும் கட்சியே எனது உயீர் மூச்சு என திடமாக கூறினார்.
இதற்கான மறுப்பு செய்தியொன்றை வெளியிடுமாறும் தான் நாடு திரும்பியதும் தகுந்த பதில் அறிக்கை ஒன்றை வெளியிடயிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் போராளிகளே புலி பசித்தாலும் புல்லைத்திண்ணாது என்பதை நாமறிவோம் பதவி பட்டங்களுக்காகவும் பணத்திற்காகவும் காலத்திற்கு காலம் கட்சிமாறி வாதந்திகளை பரவவிட்டு கேவலமான அரசியல் செய்யும் அரசியல் வாதி பஷீர்சேகுதாவூத் அல்ல என்பதை கட்சியின் போராளிகள் நன்கறிவீர்கள் தவிசாளர் பஷீர்சேகுதாவூத் பற்றி தங்கள் மனங்களில் தவறான எண்ணங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றைக்களைந்து எதிர்வரும் பாராளமன்றத் தேர்தலில் நமது கட்சியின் வெற்றிக்காக போராளிகள் அனைவரும் ஒன்றுதிரண்டு மரச்சின்னத்திற்கு வாக்களித்து நமது மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.