ஓட்டமாவடி அஹமட் இர்சாட்-
ஏறாவூரில் நேற்று 17.07.2015 வெள்ளிக்கிழமை இப்தார் நிகழ்சியோடு முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் வருக்கின்ற பொதுத்தேர்தல் சம்பந்தமாக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் முஸ்லிம் காங்கிரசின் போராளிகள் கருத்து தெரிவிக்கையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக சிறு கைகலப்புடன் பத்து நிமிடங்களுக்கு மேலாக கலந்துரையாடலில் அமளிதுமளி ஏற்பட்டது.
இதைதொடர்ந்து அங்கிருந்த ஏனைய போராளிகளாலும்,
சமூகமளித்திருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் மெய்ப்பாதுகாவலர்களாலும் பிரச்சனையானது சமாதானமாக்கப்பட்டு முஸ்லிம் காங்கிரசின் தலைவர் தனது கருத்துக்களை தெரிவிப்பதற்கு இடமளிக்கப்பட்டது. இக்கலதுரையாடலில் முஸ்லிம் காங்கிரசின் தேசிய தவிசாளர் பசீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், முன்னணி முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் அலிசாஹிர் மெளலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆகியோர்களுடன் முக்கிய முஸ்லிம் காங்கிரசின் அரசியல்வாதிகளின் ஆதாரவாளர்களும்,
ஏராவூரின் முஸ்லிம் காங்கிரசின் முக்கிய உறுப்பினர்களும், ஏராவூர் மற்றும் கல்குடா பிரதேச முஸ்லிம் காங்கிரசின் போராலிகளும் கலந்து கொண்டனர். இவ்வாறாதொரு அமளிதுமையான சம்பவம் இன்று காலை 18.07.2015 கல்குடா மீராவோடை ஜும்மா பள்ளிவாயலுக்கும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் வருகைதந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.