முன்னர் எப்போதும் இல்லாதவாறு யாழ்.குடாநாட்டில் க.பொ.த உயர்தர பரீட்சை நிலையங்களை கொண்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இம்முறை பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.கே.வூட்லர் தெரிவித்தார்.
இதற்கான கலந்துரையாடல் இன்று காலை வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையில் இடம்பெற்றது. இதுகுறித்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஓகஸ்ட் 4 ஆம் திகதி க.பொ.த உயர்தரப்பரீட்சை ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை 23 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சையும் இடம்பெறவுள்ளது. மீண்டும் பரீட்சைகள் அனைத்தும் செப்ரெம்பர் 08 ஆம் திகதி முடிவுக்கு வருகின்றது. இந்தநிலையில், நடைபெறவுள்ள பரீட்சையில் முறைகேடுகள் மற்றும் வன்முறை சம்பவங்கள் இடம்பெறாது தடுப்பதற்காக பாடசாலைகளுக்கு 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
அதேபோல பரீட்சைக்கான வினாத்தாள்களை எடுத்து வரும் போதும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவர்.