ஏறாவூர் பொலிஸ் பிரிவில் விபத்து -மின்சாரம் தடை


ஏறாவூர் ஏ.எம். றிகாஸ்-

ட்டகக்ளப்பு-ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மயிலம்பாவெளி பிரதேசத்த்pல் 30.07.2015 அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காணமடைந்துள்ளனர். இதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கான மின்சார விநியோகம் சுமார் நான்கு மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வழியாக களுவாஞ்சிக்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்த வான் வீதியின் வலது புரத்திற்குச் சென்று மின்கம்பத்துடன் மோதியுள்ளது. இதனால் மின் கம்பம் பல துண்டுகளாக முறிந்துள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கத்தினால் வாகனத்த்pன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. வான் பலத்த சேதமடைந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரை ஏற்றிக்கொண்டு வீடுசென்றபோது வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளள்னர்.

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -