அரக்கனான மகிந்தவை தோற்கடிப்போம் - ஷிப்லி பாருக்

காத்தான்குடியில் 2015.07.28ம் திகதி பாலமுனை பிரதேசத்துக்குறிய SLMC யின் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வானது பாலமுனை இளைஞர் விளையாட்டுக்களக அமைப்பின் தலைவரும் புதிய காரியாலய பொறுப்பாளருமாகிய சியாட் அவர்களினால் ஒழுங்குசெய்யப்ட்டது. 

இந்த நிகழ்வில் காத்தான்குடியின் slmc யின் உயர்பிட உறுப்பினர்கள் மற்றும் கௌரவ மாகாணசபை உறுப்பினரும் பாராளுமன்ற தேர்தலில் மரச்சின்னத்தில் 5ம் இலக்கத்தில் போட்டியிடும் பொறியலாளர் ஷிப்லி பாருக் அவர்களும் கலந்து சிறப்பித்து உரையாற்றினார். 

இந்நிகழ்வில் பொறியலாளர் ஷிப்லி பாருக் உறையாற்றுகையில்,

காரியாலயம் திறப்பதன் நோக்கமானது எங்களுடைய செயற்பாடுகளை இந்த காரியாலயத்தின் ஊடாக மிக சிறந்த முறையில் அமைக்க வேண்டும் என்பதோடு எமது ஆதரவுகள் அதிகரிக்கப்ட வேண்டும் என்பதுமாகும்.

இந்த காரியாலயத்தின் ஊடாக நாம் மிகமுக்கியமான இரண்டு விடயங்களை மேற்கொள்ள வேண்டும்.

01. பாராளுமன்றத்துக்கு சிறந்த ஒரு தெரிவைக் கொடுப்பதும் அதே நேரத்தில் எமது சமூகத்தின் தனித்துவத்தை பாதுகாத்துக் கொள்வதுமாகும்.

02. எமது சமூகம் அனுபவித்த கஸ்ட நிலைமைகளை மீண்டும் தங்களுக்கு தாங்களாகவே ஏற்படுத்திக் கொள்ளாமல் தவிர்த்துக் கொள்ள வேண்டிய சூழலை ஏற்படுத்த வேண்டி இருக்கிறது.

மேலும் அவர் தெரிவிக்கையில் 

இரண்டாவது விடயத்தில் எமது உரிமைகளை பறித்தெடுத்து அவற்றை எல்லாம் எமக்கு தரமறுத்த முன்னால் ஜானாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை பிரதமராக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரையும், மீண்டும் எமது சமூகத்தின் இரத்தத்தை ஓட்டத் துடித்துக் கொண்டிருக்கும் அரக்கர்களான மகிந்த மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் தோற்கடிப்பதே இதன் நோக்கமாகும் எனத்தெரிவித்தார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -