இக்பால் அலி-
மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பல கூறுகளாக உடைத்து விட்டார். பாரியவிலான நெருக்கடியை அது எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. பெரு எண்ணிக்கையான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர்கள் எங்கள் கட்சியுடன் இணைந்த வண்ணம் உள்ளார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ அணி ஊழல் நிறைந்த சிக்கலுக்குள் சிக்குண்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஜவுக்கு ஒரு நல்ல பாடம் புகட்டவுள்ளோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
குருநாகல் மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்காக மக்கள் விடுதலை முன்னணியின் சார்பாக போட்டியிடும் முதன்மை வேட்பாளர் நாமல் கருணாரத்ன வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்பு ஊடவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு இதனை இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;
ஐக்கிய தேசிய கட்சி கூட பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. வேட்பு மனு தயாரிக்கும் விடயத்தில் பல்வேறு பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது. அதேபோல மத்திய வங்கயில் இடம்பெற்ற ஊழல் மோசடியில் சம்மந்தப்பட்ட விடயம் தொடர்பாக முகம் கொடுத்துள்ளது.
விசேட இந்த மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுபவர்கள் கடுமையான ஊழ்ல் மோசடியில் ஈடுபட்டவர்கள் போட்டியிடுகின்றார்கள். ஜொனஸ்டன் பெர்னாண்டோ, டி. பி. ஏக்கநாயக்க, உள்ளிடவர்களுக்கு ஊழல் மோசடி தொடர்பாக குற்றச் சாட்டுக்கள் உள்ளன. இவ்வாறு நாட்டை நாசாமாக்கிய திருட்டுக் கும்பலுடன் போட்டியிடுகின்றனர். நாங்கள் தற்போது குருநாகல் மாவட்டத்தில் பலம் வாய்ந்த அணியாகத் திகழ்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.