புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் பயணப்பையிலிருந்த சடலம் தொடர்பான மேலதிக தகவல்கள்

பெஸ்டியன் மாவத்தை - தனியார் பேருந்து தரிப்பிடத்தின் அநுராதபுர பேருந்துகள் நிறுத்தும் இடத்தில், பயண பொதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட மனித சடலம் தொடர்பாக நீதவான் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளன.

குருதி உறைந்த நிலையில், சடலம் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனையின் பொருட்டு சடலம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து தரிப்பிட்டத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தை அடையாளங் காண்பதற்காக காவற்துறையினர் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த பெண்ணின் சில புகைப்படங்களை காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தது.

கொழும்பு- பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பிடத்தில் பயணப் பையொன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் செல்வதற்கான வரிசையில் இருந்தே இது மீட்கப்பட்டுள்ளது. பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணியளவிலேயே இது கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் அவ்விடத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -