அமைச்சர் ஹக்கீமின் உரைக்கு ஆட்டம் காண தொடங்கியிருக்கும் மக்கள் காங்கிரசின் செல்வாக்கு

மைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனை கூட்டத்தில் பேசுகையில் “கலாநிதி இஸ்மாயில் அவர்கள் பாராளுமன்றம் சென்றால் தான் தனது காதினை வெட்டிக் கொள்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கலாநிதி இஸ்மாயில் அவர்கள் பாராளுமன்றம் சென்றதால் அமைச்சர் ஹக்கீம் தனது காதினை வெட்டிக் கொண்டார் என்ற குறையோடு அமைச்சர் ஹக்கீம் அங்கும் இங்கும் சுற்றித் திரியும் அளவு மானம் கெட்டவரும் அல்ல.

எனவே, தனது காதினை வெட்டிக் கொள்வேன் என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டிருப்பதானது கலாநிதி இஸ்மாயில் வெற்றி பெற்றால் தான் வீடு செல்வேன் என்பதற்கு நிகரான பொருளோடும் நோக்கலாம்.அமைச்சர் வீடு செல்வாரா? என்ற கலாநிதி இஸ்மாயிலின் இன்றைய விவாதத்திற்கு அமைச்சர் ஹக்கீம் அன்றே பதில் வழங்கிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

அமைச்சர் ஹக்கீம் தனது காதை இழப்பாரா ? இதற்கு சம்மாந்துறை மக்கள் தனது வாக்கால் தான் பதிலளிப்பர்.ஆனால் புதிதாக களமிறங்கியிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் முன்னால் மேயர் சிராஸ் ,அதே ஊரை சேர்ந்த அன்வர் எம் முஸ்தபா,அரசியல் காய் நகர்தல் தெரிந்த மஜீத் (போலீஸ் உயரதிகாரி),இப்படி மக்கள் செல்வாக்கில் பலம் கூடியவர்கள் போட்டியிடுவதால் கடைசி நிமிடம் வரை இத்தேர்தல் களம் சூடு பிடிக்கும் என்பது உண்மையே.

காதை அமைச்சர் ஹக்கீம் இழக்கும் சந்தர்ப்பம் வருமா? இல்லை இஸ்மாயிழுக்கு வெல்லும் அளவிற்கு விருப்பு வாக்கு கிடைக்குமா? என்பதை மக்கள் சிந்தித்து பதிலளிக்கும் நேரம் இது. இஸ்மாயில் பலத்த சவால்களை முஸ்லிம் காங்கிரசிடமிருந்தும் மக்கள் காங்கிரசிடமிருந்தும் பெற வேண்டி இருக்கிறது.

மக்கள் காங்கிரசால் பொது வேட்பாளராக களமிரக்கியிருக்கும் அன்வருக்கு மாவட்டம் செறிந்த அளவில் வாக்கு உள்ளது போலும், இஸ்மாயிலுக்கு சம்மாந்துறையில் சிறிய செல்வாக்கு இருப்பதாலும் சம்மாந்துறைக்கு இரண்டு ஆசனம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதால் ஹக்கீம் காதை இழப்பாரா? இல்லை இஸ்மாயில் மண் கவ்வுவாரா? என்பதை மக்கள் இறுதி தீர்ப்பை தேர்தல் தினத்தில் வழங்குவர்.

என்றாலும் அமைச்சர் ஹக்கீமின் அந்த பேச்சுக்கு பிறகு முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியாளர்களும் தளம்பல் நிலை வாக்காளர்களும் , ஏன்? பிரச்சினையை வளர்ப்போம். பேசாமல் அதாவுல்லாஹ் விற்கு அல்லது அதே சின்னம் இலக்கம் ஒன்றில் போட்டியிடும் சம்மாந்துறையை சேர்ந்த அன்வருக்கு வாக்களிப்போம் என பேசி கொள்வதும் இங்கு நாம் கவனிக்க வேண்டும்.

துறையூர் கலீல் சஜா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -