ஷிப்லிக்கு குவிந்த ஆதரவுகளும் - ஹிஸ்புல்லாஹ்வின் பூச்சியங்களும்...!

திர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக 5ம் இலக்கத்தில் போட்டியிடும் காத்தான்குடியைச் சேர்ந்த பொறியியலாளர் சிப்லி பாரூக்கிற்கான ஆதரவுகள் தற்பொழுது அதிகரித்து வருவதை காத்தான்குடி பிரதேசத்தில் நன்கு அவதானிக்க முடிகிறது.

எமது இரகசிய கருத்துக்கணிப்புக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது வழங்கப்பட்டிருந்ததுபோலவே தற்பொழுது காத்தான்குடியிலும் அதனைச் சூழவுள்ள பாலமுனை, பூனொச்சிமுனை மற்றும் காங்கேயனோடை ஆகிய பிரதேசங்களிலும் கணிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பொறியியலாளர் சிப்லி பாரூக்கிற்கான ஆதரவுகள் அதிகரித்து வருகின்றன.

இதனைவிடவும் காத்தான்குடிக்கு வெளியிலும் அவருக்கான ஆதரவுகள் இருக்கின்றபோதிலும் அதனை எம்மால் கணிக்க முடியவில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களுக்கு கடந்த 25 வருடங்களாக ஏற்பட்ட எவ்விதப் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்காமல் ராஜகௌரவங்களையும், பதவிகளையும் அதன் உறுப்பினர்கள் அனுபவித்து வந்தபோதிலும், கட்சிக்கு அல்லாமல், சிப்லி பாரூக்கிற்காகவும், கடந்த 25 வருடங்களாக காத்தான்குடியில் அரசியல் புரிந்துவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ‘விலை’ பேசப்படும் ஆதரவுகள் தற்பொழுது இப்பிரதேச மக்களுக்கு நன்கு தெளிவாகி வருவதாலும் தங்களது ஆதரவுகளை சிப்லி பாரூக்கிற்கு வழங்குவது என பலர் தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் மேடைகளில் அபிவிருத்தியை முன்னிருத்தி, பல ‘பூச்சியங்கள்’ பெறுமதிமிக்க தொகையை மக்கள் முன்னிலையில் தெரிவிப்பதால், 100 ரூபாயாவது தினமும் உழைத்து தங்களது குடும்பங்களைக் காக்க முடியாது காத்தான்குடி மற்றும் அயல் பிரதேச ஏழை மற்றும் நடுத்தர மக்கள், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மேடைகளில் கூறிவரும் பல மில்லியன்களுக்கு எத்தனை பூச்சியங்கள் என தெரியாமல் குழம்பிப்போய் இருப்பதையும் காணமுடிகிறது.

படித்த இளைஞர்கள் நாட்டில் வேலையில்லாமல் மத்திய கிழக்கில் சென்று வெயிலில் கஸ்டப்பட்டு உழைக்கும்போது, படிப்பில்லாத எத்தனையோ பேர் பல சுகங்களை அரசியல் என்றபேரில் இவ்வூரில் அனுபவிப்பதாலும், படித்த இளைஞர்கள் சிப்லி பாரூக்கை ஆதரிக்க முன்வந்திருக்கின்றனர்.

ஜால்ரா இல்லாமல், அட்டகாசம் இல்லாமல் அமைதியாக சிப்லி பாரூக்கிற்கான ஆதரவுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெண்களும் தாய்மார்களும் தங்களது ஆதரவுகளை சிப்லி பாரூக் அவர்களுக்கே வழங்குவதாகவும் ஆரம்பக்கட்ட கணிப்பில் தெரியவருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -