முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் அல்ல பிரதேச சபைத் தேர்தலில் வெல்வதும் மகிந்த ராஜபக்சவுக்கு வெறும் கனவாகவே இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அம்பாறை ஹிங்குரான பிரதேசத்தில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் அபிவிருத்திக்காகவும் நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்க வேண்டியது கட்டாயமான தேவை எனவும் தயா கமகே மேலும் தெரிவித்துள்ளார்.