(சாய்ந்தமருது)அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் கிளையினால் நியமனம் வழங்கும் நிகழ்வு

பி.எம்.எம்.ஏ.காதர்-

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் சாய்ந்தமருது கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட  அங்கத்தவர் நியமனம் வழங்கலும், வருடாந்த இப்தார் நிகழ்வும் கடந்த (12-07-2015) ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது ஸீ பிறீஸ் உணவகத்தில் அமைப்பின் தலைவரும், ஊடகவியலாளரும், ஆசிரியருமான எஸ்.அஷ்ரப்கான் தலைமையில் இடம்பெற்றது.

ஏ.கே.எம். ஹஸ்னி இன் கிராஅத்துடன் ஆரம்பமான இந்த இப்தார் நிகழ்விற்கு பிரதான அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபையின் தவிசாளரும், ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாரை தெற்குப் பிராந்திய அமைப்பாளருமான சந்திரதாஸ கலபதி அவர்களும், விசேட அதிதிகளாக வர்த்தகர் எம்.எம். ஜமால்டீன், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் திட்ட தவிசாளரும், பிராந்திய உணவு மருந்து பரிசோதகருமான எஸ். தஸ்தகீர், பேரவையின் மாவட்ட பணிப்பாளர் கே.எம். சுபைர், சர்வ சமய சம்மேளனத்தின் அம்பாரை மாவட்ட தலைவர் டாக்டர் ஜெமீல்  சந்திரதாஸ கலபதி அவர்களின் அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேச இணைப்புச் செயலாளரும் பிரத்தியேகச் செயலாளருமான ஏ.எச்.சிறாஜ் அஹமட், நிகழ்வினை ஏற்பாடு செய்த சாய்ந்தமருது கிளையின் பொருளாளரும், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.எம். அன்வர் உட்பட அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள், சமயப் பெரியார்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர். 

இந்நிகழ்வின்போது 50 பேருக்கு சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ இன் எதிர்கால நிரந்தர உறுப்பினர்களாக நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -