ஏறாவூர், ஏஎம் றிகாஸ்-
கிழக்குப்பல்கலைக் கழகத்தில் நியமிக்கப்பட்டுள்ள தகுதிவாய்ந்த அதிகாரியினால் முன்னெடுக்கப்படும் முறையான நடவடிக்கைகளைக் குழப்பும்வகையில் அண்மைக்காலமாக அனாமதேய துண்டுப்பிரசுரங்கள் மற்றும் கடிதங்களை வெளியிட்டுவருவோரைக் கண்டித்து இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது;.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஆசிரியர்கள் சங்கத்தினால் மட்டக்களப்பு-வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக ஏற்பாடுசெய்யப்பட்ட இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுலோகங்களை ஏந்திநின்றதுடன் துண்டுப்பிரசுரங்களையும் வினியோகித்தனர்.