பணத்துக்கும், வானூர்திப் படத்திற்கும் மக்கள் சோரம் போகமாட்டார்கள் - நஸீர் MPC

அபு அலா -

ம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்குமாக இருந்தால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியூடாகத்தான் கிடைக்கும். வேறு எந்தக் கட்சியூடாகவும் கிடைக்கவே கிடைக்காது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை 2 ஆம் பிரிவு கிளைக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்றிரவு (30) பிரதி அதிபர் ஏ.எல்.எம்.பத்தாஹ் தலைமையில் இடம்பெற்றபோது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அட்டாளைச்சேனைக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தருவதாக எந்த வாக்குறுதிகளையும் வழங்கவில்லை. ஆனால் அட்டாளைச்சேனைக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்க என்னியுள்ளேன் என்றுதான் கூறிள்ளதே தவிற உறுதியாகக் கூறவில்லை.

அட்டாளைச்சேனையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எமது தலைவர் கலந்துகொண்டு உரையாற்றும்போதுதான் கூறினார் நான் இம்முறைதான் அட்டாளைச்சேனைக்கு ஒரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்க முடிவு செய்துள்ளேன் என்பதை மிக தெட்டத்தெளிவாக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் கூறியுள்ளார்.

இதனை சகித்துக்கொள்ள முடியாத எதிரணியினர் பல பொய்யான பிரச்சாரங்களையும், கட்சிக்கு எதிராக சதித்திட்டங்களையும் தீட்டி மக்களை ஏமாற்றும் நோக்கில் இன்று அட்டாளைச்சேனைக்கு வானூர்தி மூலமாக தயாகமேகவை வரவழைத்து மக்களுக்கு ஆயிரம், இரண்டாயிரம் பணங்களை கொடுத்து வாக்குத்தேட முனைகின்றனர்.

இந்த ஆயிரம் இரண்டாயிரம் பணத்துக்கோ அல்லது வானூர்தியில் வந்து ஒரு இங்கிலிஸ் படம் காட்டிச்செல்லும் நபர்களுக்கோ ஒருபோதும் அட்டாளைச்சேனை மக்கள் சோரம் போகவும் மாட்டார்கள், அடிபணிந்து நடக்கவும் மாட்டார்கள் என்பதை அவர்கள் மிகத் தெட்டத்தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டும். இவாரானவர்களுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி நல்லதொரு பாடத்தை இந்த அட்டாளைச்சேனை மக்கள் புகட்டிக்காட்டுவார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியூடாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பதவிகளை பெற்றுக்கொண்ட சிலர் தங்களுக்கு தலைமைத்துப் பதவி வேண்டும், அமைச்சுப் பதவி வேண்டும் என்றெல்லாம் கேட்டு சன்டையிட்டு கட்சியை விட்டு வெளியேறியவர்களே இன்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகச் செயற்பட்டு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறனவர்களுக்கு ஒரு முகவரியையும், ஓரு வாழ்வையும் கொடுத்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் தலைமையும் மறந்து ஒரு நன்றிகெட்டவர்களாக இருந்துகொண்டு இந்த கட்சிக்கு எதிராக பல சதித்திட்டங்களையும், வீண் அவதூறுகளையும் செல்லி தங்களின் வாக்குகளை தேடும் முயற்சியில் செயற்பட்டு வருகின்றனர்.

ஆனால் மு.காவின் போராளிகள் இந்த பசப்பு வார்த்தைகளுக்கும் பணத்துக்காகவும் அடி பணிந்து நடப்பவர்களும் அல்ல என்பதை அவர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -