எம்மை இலக்கு வைக்க முடியும். ஆனால் நாட்டை இலக்கு வைக்க முடியாது. எமது ஆதரவாளர்களை தாக்கிய பயங்கரவாதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம். எமக்கு பயம் இல்லை. முன்னோக்கி செல்வோம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிதியமைச்சர் ரவி கருநாயக்க ஆதரவாளர்கள் மீது இன்று முற்பகல் 11.30 மணியளவில் இனந் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் பலியானதுடன் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆதரவாளர்களை பார்வையிடச் சென்ற அமைச்சர் ரவி கருநாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இது போன்ற பயகரமான செயல்களை செய்யும் பயங்கரவாதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம். இச்சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் எமக்கு சில சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றை வைத்து விசாரணை செய்து குற்றவாளிகளை மக்கள் முன் நிறுத்துவோம் என்றார்.
Lankadeepa