சியாத் அகமட் லெப்பை-
திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் மூன்றாம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர் மு- SSP மஜீத் அவர்களை ஆதரித்து பொத்துவிலில் கருத்தரங்கு ஒன்று (29) நடைபெற்றது.
இக் கருத்தரங்கில் சில முக்கிய பிரமுகர்களுடன் சட்டத்தரணி எஸ்.முனாசுதீன் அவர்களும் கலந்து கொண்டார்.எதிர் வரும் தேர்தலை எவ்வாறு அணுகவேண்டும் என்பதை பற்றிய கலந்துரையாடல் ஒன்றே இடம்பெற்றது.
கலந்துரையாடும் போது SSP மஜீத் அவர்கள் தனது கருத்துக்களை தெரிவிக்கையில்…
நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக 2001மாம் ஆண்டில் இருந்த காலத்தில் கல்முனை மாநகரசபை பிரதேசத்தில் அமைந்திருக்கும் சந்தான்கேணி பொது மைதானத்தை சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி செய்வதற்காக 06/05/2001திகதியில் பாராளுமன்றத்தில் முன் மொழிந்து இருந்தேன்.
அவ்விடயத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் எ.எச்.எம்.அஸ்வர் அவர்கள் 2011ம் ஆண்டு முன்மிளிந்து இருந்தார். இவ்வடயத்தை முன் எடுத்து செல்லும் படி கௌரவ சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அவர்களிடம் அம் மைதானத்தை அஷ்ரப் மைதானம் என பெயர் சூடவும் பரிந்துரை செய்த கடிதம் ஒன்றினை எச்.எம்.எம் ஹரீஸ் MP,கல்முனை நகரபிதா,ஏ.எச்.எம்.அஸ்வர் MP,அப்துல் ரசாக் MPC இவர்களுக்கும் கடிதப் பிரதியினை அனுப்பி வைத்தேன்.
எனவும் அவர் தொடர்ந்தும் கருத்துக்களை தெரிவிக்கையில்…….
பொத்துவிலை சேர்ந்த எம்.எ. மௌஜூன் என்ற ஒரு முஸ்லிம் காங்கிரஸ் பிரதேசசபை வேட்பாளர் 2011 ஆண்டு இராணுவத்தினரால் எவ்வித காரணமும் இன்றி சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்கும் படியும், அவரது மனைவிக்கு ஒரு தொழில் வாய்ப்பு கொடுக்கும் படியும் அன்று நிதி அமைச்சராக இருந்த கௌரவ ரவுப் ஹக்கீமிடம் பரிந்துரை செய்தேன் அதற்கான கடிதம் எம். டி. ஹசன் அலி, எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம் ஆகியோருக்கு 14/11/2011 அனுப்பி வைக்கப்பட்டது.
பொத்துவில் வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைந்திருந்த நீதிமன்ற கட்டிடத்தை, வேறு ஒரு இடத்திற்கு மாற்றகொரியும், நீதிமன்றம் அமைந்திருந்த பழைய இடத்தை வைத்தியசாலைக்கு எடுத்து தருமாறு கோரியும் முன்னாள் நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு கடிதம் ஒன்றினை கொடுத்திருந்தேன்.
அதற்கினங்க காசிம் மௌலவி அவர்களின் காணியை புதிய நீதிமன்றம் அமைப்பதற்கு நன்கொடையாக கொடுக்க சம்மதம் தெரிவித்தார் அத்தோடு பொத்துவில் பிரதேச செயலாளர் யு.எல்.நியாஸ் அவர்களிடம் சமர்பித்தேன் இப்படியான என் சில முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளது.
சில முயற்சிகளுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தடையாக இருந்தார் 2015க்கான பொதுத் தேர்தலில் நான் ஐக்கிய தேசிய கட்சியில் வேட்பாளராக வருவதற்கிருந்தேன் அவர் தயாகமகேயோடு இணைந்து இருவருமாக எனக்கு வெட்டி விட்டார்கள் இவர்களுடைய இந்த செயல் எனக்காக இல்லை பொத்துவில் மக்களுக்காக ஒரு பிரதிநித்துவத்தை தெரிவு செய்யக்கூடாது என்னும் திட்டத்திலேயே இவர் இதனை செய்திருக்கின்றார்.
அப்படித்தான் எனக்கு ஐக்கிய தேசிய கட்சியில் இடம் கிடைத்திருந்தாலும் வெற்றிபெற முடியாது ஏனெனில் பெறும்பான்மையானவர்கள் மூவரை வேட்பாளராக நிருத்திருக்கின்றார்கள் நான்காவது ஒருத்தராக வருவது முடியாத ஒரு விடயமாகும்.
யார் என்ன செய்தாலும் நமது பொத்துவில் மக்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது பொத்துவில் மக்களாகிய நாம் ஒன்;றிணைந்து ஒருத்தருக்கு வாக்களிக்கும் காலகட்டம் இது
எனவே நானும் மயில் சின்னத்தில் மூன்றாம் இலக்கத்தில் போட்டியிடுகின்றேன் உங்கள் வாக்குகளை பொத்துவிலின் எதிர்காலத்தை சிந்தித்து எனக்கு வாக்களியுங்கள் எனது வெற்றி உங்கள் வெற்றி பொத்துவிலின் வெற்றி என முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மஜீத் அவர்கள் தனது கருத்தினை தெரிவித்தார்.