அம்பாரை மாவட்டம் திகாமடுள்ள தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் அறப்போர் அரியநாயகத்தின் பேரன் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் தனது வேட்பு மனுவினை கையளித்து விட்டு தொடர்ந்து இறை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இவர் அம்பாறை பிள்ளையார் ஆலயம் அக்கரைப்பற்று பனங்காடு ஆலையடிவேம்பு கோளாவில் தீவுக்காலை கண்ணகிபுரம் தம்பிலுவில் திருக்கோவில் விநாயகபுரம் பாலக்குடா ஆகிய பிரதேசங்களில் தனது இறை வழிபாடுனளில் ஈடுபட்டதோடு கல்முனை காரைதீவு பேிரதேசங்களிலும் இறைவழிபாடுகளில ஈடுபட்டார்.
அதுமட்டுமன்றி திருக்கோவில் அக்கரைப்பற்று தேவாலயங்களிலும் ஜெபஆராதனையில் ஈடுபட்டார். இதன் போது திரு அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களுக்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது