15 லட்சம் மோசடி செய்த - சுசில்

கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் சுசில் பிரேமஜயந்த, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தில் 15 லட்சம் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக அரசு கண்காணிப்பிடம் இருந்து உறுதியாகியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் நெருங்கிய சந்தர்ப்பத்தில் அவர் அப்பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தினால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கை தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டும் பலகைகள் நிறுவுவதற்காக 15 மில்லியன் செலவிலான வேலை திட்டத்தின் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதற்கு 15 லட்சம் மாத்திரம் செலவிடப்பட்டுள்ளதாக பின்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த காலக்கட்டத்தில் அவ் நிறுவனத்தில் தலைவராக இருந்த, கிழக்கு கொழும்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சேனாரத்ன ஜயசுந்தர இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

அதனை செயற்படுத்துவதற்கு முன்னரே சுசில் பிரேமஜயந்த 15 லட்சத்தை பெற்றுக்கொண்டுள்ளார். முன்னாள் தலைவர் சேனாரத்ன ஜயசுந்தரவின் செயலாளராக செயற்பட்ட லக்மால் என்பவர் இப்பணத்தை தங்கள் நிறுவனத்தின் மூலம் சுசில் பிரேமஜயந்தவுக்கு வழங்கியதாக உறுதி செய்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -