3 முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் வென்ரெடுக்க முடியும் - மேயா் முசம்மில்

அஸ்ரப் ஏ சமத்-

கொழும்பு மாவட்ட முஸ்லீம்கள் அம்பாறை மாவட்ட முஸ்லீம்கள் போன்று ஒன்று பட்டால் 3 முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பிணா்களை கொழும்பில் வென்ரெடுக்க முடியும். ஒரு இலட்சத்து 50 ஆயிரம் முஸ்லீம்கள் வாக்காளா் கொழும்பில் இருக்கின்றாா்கள். என கொழும்பு மேயா் முசம்மில் தெரிவிப்பு.

கடந்த பாரளுமன்றத் தோ்தலில் ஜ.தே.கட்சியில் நானும், மா்ஹூம மஹ்ருப்பும், சபீக் ராஜப்டீனும் தோ்தல் கேட்டோம். ஆனால் நீங்கள் ஒன்று படாமல் கொழும்புக்கு வெளியில் உள்ளவா்களுக்கு விருப்பு வாக்குகளை அளித்தீா்கள் கடந்த 6 வருட காலமாக கொழும்பில் முஸ்லீம் பாராளுமன்றம் பிரநிதித்துவம் இல்லாமல் போகிவிட்டது. நாம் விருப்பு வாக்குகளை அளித்தவா்களது வீடுகள் கூட எங்கு இருக்கின்றது தெரியாமல் ்இருந்தோம்.

ஆனால் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் கடந்த முறை ஜ.தே.கட்சியில் கேட்ட மனோ கனேசனின் சகோதரா் பிரபா கனேசனை தோ்ந்தெடுத்து எம்.பியாக்கினாா்கள். அவரது சேவையினால் அவா் தமிழ் ்பாடசாலைகளை அபிவிருத்தி செய்தாா். ஆனால் கொழும்பு மத்திய பிரதேச பாடசாலைகள் இன்னும் பின்தங்கியே உள்ளன.

என மேற்கண்டவாறு கிராண்பாஸில் போட்டியிடும் பெரேசா முசம்மில் ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திலேயே கொழும்பு மேயா் ஏ.ஜெ.எம். முசம்மில் தெரிவித்தாா்.

இம்முறையும் ஜ.தே.கட்சியில் 3 முஸ்லீம்கள் கேட்கின்றனா். கடந்த முறை செய்த வேலையை இம்முறை செய்துவிடாதீா்கள். தலைவா் ரணிலுக்கு வாக்களித்து அடுத்த 2 விருப்பு வாக்குகளை பெரோசா, முஜிபு ரஹ்மானுக்கு இடுங்கள்.

இம்முறை கொழும்பில் ஜ.ம.சு மு. வெற்றிலைச்சின்னத்தில் முஸ்லீம் வேட்பாளரை தேடிஅலைந்து விட்டு பெயருக்கு ஒருத்தரை போட்டுள்ளாா்கள்.
இம்முறை முன்னாள் அமைச்சா் பௌசி தோ்தல் குதிக்க வில்லை. ஆகவேதான் இம்முறை நல்ல சா்ந்தப்பம் பெரோசாவை கொழும்பு மாவட்ட ஜ.தே.கட்சி அமைப்பாளா் பதவியை தலைவா் அவராகவே பெரோசவுக்கு வழங்கி இம்முறை எந்தவித அளுத்தமும் இல்லாமல் தோ்தலில் நிறுத்தியுள்ளாா்.

கடந்தமுறை பெரோசா மாகாணசபைத் தோ்தலில் குதித்திருந்தால் இம்முறை அவவக்கு பாராளுமன்ற தோ்தலில் கேட்க வாய்ப்பு இருந்திருக்காது

முஸ்லீம்கள் கொழும்பில் கூடுதலான விருப்பு வாக்குகளை பெரோசவுக்கு அளித்திருந்தால் எனக்கு ரணிலிடம் போகி இப்பிரதேசத்திற்கு பிரதியமைச்சரை வழங்கும்படி வாதிட முடியும் ஆகவே உங்கள் கைகளிலேயே அவவின் முடிபு இருக்கின்றது. பெரேசா கடந்த 30 வருடகாலமாகவே அவவின் இரத்தில் ஊறிப்போனதொரு விடயம் சமுகசேவை ஏழைமக்களுக்கு உதபுவது.

அவ தோ்தலை மட்டும் நம்பி அவவின் சேவையை செய்வில்லை.குறிப்பாக எனது மாநகர சபையின் சகல விடயங்களையும் அவவே எனக்கு பின்னால் நின்று சேவையாற்றுகின்றாா். என ஏ.ஜே.முசம்மில் தெரிவித்தாா்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -