இலங்கைத் தேச முஸ்லிம்களின் ஒரேயொரு இயக்கம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே- பழீல் BA

மது சமுதாய உரிமைகளைப் பேசுவதற்காக பேரினவாதக் கட்சிகளில் இன்னும் ஒட்டியிருந்து குளிர்காய நினைப்பது முட்டாள் தனமானது. எமது உரிமைப் போராட்டத்தை மற்றபேரினவாதக் கட்சிகள் அனுதாபத்துடன் பேசி முன்னெடுக்க வேண்டும் அதுவரையும் நாம் வாழாது எதிர்பார்த்து ஏங்கியிருக்கவேண்டும் என நினைப்பது எம்மை நாம் ஏமாற்றும் செயலாகும். அதற்கென ஒரு சுதந்திரமான உரிமைக்குரலை ஏற்படுத்தி காய்தல் உவத்தலின்றி மக்களை ஓரணியில் திரட்டி எமது பிரச்சினைகளை எமது சொந்தக்காலில் நின்று நாம் பேசி இந்த அரசியல் அடிமைத் தழையிலிருந்தும் நாம் சமுதாயத்தை விடுவிக்காதவரை எமது கடமையினை இச்சமுதாயத்திற்கு நாம் செய்து விடமுடியாது. 

இந்த அடிப்படைகளில்தான் 1986ல் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸெனும் இப்பேரியக்கத்தினை மறைந்த மாமனிதர் அஷ்ரஃப் அவர்கள் அத்தனை வாய்ப்பு வசதிகளோடும் எமது அரசியல் முகவரியாக எமக்கு உருவாக்கித் தந்தார். ஆகவே இச்சமுதாயப் பேரியக்கத்தைப் பாதுகாத்து பலப்படுத்தவேண்டியது இந்நாட்டு முஸ்லிம்கள் ஒவ்வொருவரினதும் தலையாய முதற்பணியாகும்.

இவ்வாறு அட்டாளைச்சேனை கோணாவத்தை எட்டாம் பிரிவில் நேற்று நடைபெற்ற சி.ல.மு.காங்கிரசின் மாபெரும் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போது சி.ல.மு.காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும், முன்னாள் பல்பலைக்கழக பதிவாளரும் கிழக்குமாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ஜனாப். எஸ்.எல்.எம்.பழீல் டீயு அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள்,அம்பாரை மாவட்ட வேட்பாளர்கள் போராளிகள்,உலமாக்கள் என்று மக்கள் நிறைந்திருந்த இக்கூட்டத்தில் ஜனாப். பழீல் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இக்கோணாவத்தை மக்கள் எப்போதுமே இக்கட்சியோடும் அதன் போராட்டத்தோடும் பின்னிப்பிணைந்தவர்கள். தியாகத்தோடும் சவால்களோடும் அந்தப்பணியை செய்துவருபவர்கள். 1996ன் பிற்பட்டகாலத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஒலுவில் துறைமுகத்தின் முன்னெடுப்போடு தமது அடிப்படை வாழ்வாதாரங்களை இழந்து கஷ்டங்களோடு வாழ்ந்து வருபவர்கள். இன்னும் பக்குவம் பொறுமை பண்பாடுகள் மாறாது இவ்வியக்கப் போராட்டத்தை முன்னெடுத்து வருபவர்கள். ஆனால் இப்பொறுமைக்கும் பக்குவத்திற்கும் சிறந்த கூலியும் சன்மானமும் தருவதாக எல்லாம் வல்ல இறைவன் திருமறையிலே ஆணித்தரமாக குறிப்பிடுகின்றான். 

இன்சாஅல்லாஹ் ஆகஸ்ட் 17ம் திகதிய தேர்தலின் பின்பு ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் நல்லாட்சியல் இடம்பெறவிருக்கின்ற பாரிய அபிவிருத்தி யுகத்தில் உங்களது குறைகளும் கரிசனைகளும் நிச்சயமாக கட்சியினாலும் தலைமைத்துவத்தினாலும் கவனத்திற் கெடுக்கப்படும். ஒலுவில் துறைமுகத்திட்டம் முடங்கியிருப்பதற்கான காரணங்கள் அதனை நிவர்த்திப்பதற்கான வழிமுறைகளடங்கிய அறிக்கையினை கிழக்கு முதலமைச்சரிடமும்,எமது தேசியத்தலைவரும் அமைச்சருமான மாண்புமிகு ரஊப் ஹக்கீம் அவர்களிடமும் சமர்ப்பித்திருக்கின்றேன்.

உங்களுக்கான நஷ்டஈட்டுக் கொடுப்பனவுகள்,உங்கள் வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுப்பதற்கான உதவிகள் சம்பந்தமான ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தைகள் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.ஆகவே நம்பிக்கையோடு எமது இலக்கு நோக்கிய பயணத்தை நாம் முன்னெடுக்கவேண்டும். இத்தேர்தலில் எமது கட்சியனாலும் தலைவரினாலும் தீர்மானிக்கப்பட்டு இம்மாவட்டத்தில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கும் மூவருக்கும் வாக்களித்து எமது கையையும் எமது பேரம்பேசும் சக்தியையும் கூட்டுவதற்கு நீங்கள் முன்வரவேண்டும். 

பேரினவாதிகளின் ஏஜன்டுகளாக தொழிற்படும் சமுதாயத்தைக் காட்டிக்கொடுக்கும் புல்லுருவிகள்பற்றி நீங்கள் விழிப்பாக இருக்கவேண்டும். எமது சமுதாய உரிமைக்கான ஒரேயொரு பலம்பொருந்திய இயக்கம் சி.ல.மு.காங்கிரஸ் மட்டும்தான் என்பதை மனதிலிருத்திக் கொள்ள வேண்டும்.எமது தேசியத்தலைவனின் பக்குவம், அரசியல்முதிர்ச்சி, மனிதநேயம்,பொறுமை, சாணக்கியம் என்பவற்றினால் மட்டும்தான் இந்நாட்டிலும் சர்வதேசத்திலும் எமது சமுதாய உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் வென்றெடுக்க முடியும். சமுதாயப் பெயரினால் தங்களைக் கொழுக்கவைத்து சமுதாய முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்துபவர்களினால், ஏன் சமுதாயத்ததைக் காட்டிக் கொடுப்பவர்களினால் இதற்கான தலைமைத்துவத்தை வழங்கமுடியாது என்பதையும் நன்கு புரிந்து கொள்ளவேண்டுமென்றும் ஜனாப்.பழீல் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -