மருதமுனை மண்ணுக்கு நகரசபையை வழங்கவிருந்தேன் என்கிறார்- அதாவுல்லாஹ்

எம்.வை.அமீர்-

றைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் கண்ட கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக தேசிய காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து அம்பாறை மாவட்டத்தின் கட்டமைப்பில் பல்வேறு அபிவிருத்திகள் மற்றும் பிரதேசங்களுக்கான பிரதிநிதித்துவங்களையும் வழங்கி வந்த வரலாற்றில் மருதமுனை மக்கள் எங்களிடம் கேட்காமலேயே அவர்களுக்கு நகரசபையை வழங்க நாங்கள் சகலவிதமான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தோம் என்று தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்தார்.

தொழிலதிபர் ஐயூப் நியாஸ் தலைமையில் மருதமுனை மக்களுடன் மனம்திறந்து பேசும் நிகழ்வு 2015-08-02அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் அமைச்சர், மருதமுனை மக்களின் கேள்விகளுக்கு மனம்திறந்து பதிலளித்தார்.

மகிந்தவும் தானும் வேறுவிதமான உறவு எதனையும் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்த அதாவுல்லாஹ், பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நமது பிரதேசத்தை மீட்பதற்காக அவருக்கு ஆதரவளித்ததாகவும் அதன்காரணமாக நாங்கள் எல்லோரும் சுதந்திரத்தை இப்போது அனுபவிப்பதாகவும் தெரிவித்தார்.

முஸ்லிம்களது பிரச்சினைகளைச் சொல்லி மகிந்தவை எதிர்த்தவர்கள் பின்னர் நாங்கள் அமைத்த மகிந்த அரசில் ஒட்டிக்கொண்டதாகவும் மக்கள் எல்லோரும் ஒதுங்கியதன் பின்னரே அவர்கள் வெளியேறியதாகவும் தெரிவித்தார்.

மன்னாருக்குச் சென்று மன்னார் தலைவருக்கு ஆப்புவைக்கப்போய் அம்பாறைக்கு வந்து மன்னார் தலைவர் ஆப்புவைத்தால் தற்போது அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அதிபெரும்பான்மையுடன் வெல்லக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அம்பாறையில் மயிலாட்டம் வெட்டுப்புள்ளிகுள்ளேயே அடங்கிவிடும் என்று தெரிவித்த அவர், மயிலுக்களிக்கும் வாக்கு பிரயோசனமற்றது என்றும் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நான்கு ஆசனங்களைப் பெறும் என்று தெரிவித்த அதாவுல்லாஹ், ஐக்கிய தேசியக்கட்சியூடாக இரு முஸ்லிம் பிரதிநிதிகள் வந்தால் தான் மகிழ்வடைவதாகவும் தெரிவித்தார். இங்கு கணக்குத் தெரியாத பலர் மக்களை பிழையாக வழிநடத்துவதாகவும் அவர்கள் கடந்தகால தேர்தல் முடிவுகளை பார்க்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

ரணில் சாரதியாக இருக்கும் வாகனத்தில் தலைவரின் வாக்கை மீறி ஏற விரும்பவில்லை என்று தெரிவித்த அவர், எதிர்காலத்தில் பிரதமரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே தீர்மானிப்பார் என்றும் தெரிவித்தார்.

மருதமுனை மண்ணைக் கௌரவித்த தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்களையும் அவர் வகுத்துள்ள வியூகத்தின் ஊடாக அவருடன் இணைந்து போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களையும் எதிர்வரும் தேர்தலில் ஆதரிப்பது என்றும் அதாவுல்லாஹ் அவர்களின் வெற்றி வியூகத்தில் இணைந்து செயற்படுவது எனவும் குழுமியிருந்தோர் விசுவாசப்பிரமாணம் மேற்கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -