பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை மக்களோடு மனம் திறந்து பேச என்ற தலைப்பில் தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா இன்று(02-08-2015)லுஹர் தொழகையின் பின் மருதமுனைக்கு வந்தார்.
தேசிய காங்கிரஸ் மருதமுனை அமைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள ஐயூப் நியாஸ் தலைமையில் அவரது ஐயூப் பில்டிங்கில் இந்த சந்திப்பு இடம் பெற்றது.இங்கு கட்சியின் அலுவலகமும் தேசிய காங்கிரஸ் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது.
சுகவீனமுற்றிருக்கும் எம்.எஸ்.ஐயூப் ஹாஜியார் ஜே.பி அவர்களையும் அதாஉல்லா சந்தித்து அரவணைத்து ஆறுதல் கூறினார்.இந்த மக்கள் சந்திப்பில் தேசிய காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் ஐ.ஏ.ஹமீட்,கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் தற்போதய உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை,சட்டத்ரணி பஹிஜ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு ஆதரவாளர்களிடம் மனம் திறந்து கேள்விகளைக் கேட்கச் சொல்லி அந்தக் கேள்விகளுககுப் பதில் அளித்து முன்னாள் அமைச்ர் பேசியதுடன் சமகால அரசில் கள நிலவரங்களையும் தெளிவுபடுத்தி தேர்தல் முடிவு எவ்வாறு அமையும் என்பது பற்றியும் விளக்கமளித்தார்.
பெரும் அளவில் ஆதரவாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.