மனச்சாட்சியுள்ள மக்கள் தேசிய காங்கிரசையே ஆதரிப்பார் சாய்ந்தமருதில் அதாவுல்லாஹ்

எம்.வை.அமீர்-

மாபெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களின் மறைவைத் தொடர்ந்து அவர் பிறந்த இம்மண்ணில் அவர் கண்ட கனவுகளை தேசிய காங்கிரசே நிறைவேற்றி வருவதாகவும் தேசிய காங்கிரஸ் ஒருபோதும் சந்தர்ப்பவாத அரசியல் செய்யாது என்றும் தேசிய காங்கிரசின் வியூகங்கள் ஊடாக வாக்குப்பலம் குறைந்த பிரதேசங்களில் இருந்தும் பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளதாகவும் இம்முறை வகுக்கப்பட்ட வியூகத்தின் அடிப்படையில் சாய்ந்தம்ருதுக்கு பாராளமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவுசெய்யக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் இம்மக்கள் கருத்தில் கொள்ளாதது கவலையளித்ததாகவும் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தேசியத்தலைவருமான ஏ.எல்.அதாவுல்லாஹ் தெரிவித்தார்.

மக்களுடன் மனம்திறந்து பேசும் நிகழ்வு ஒன்று சாய்ந்தமருது பாரடைஸ் மண்டபத்தில் சாய்ந்தமருது அக்பர் ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் எம்.எம்.ஜப்பார் அவர்களது தலைமையில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்முனைத் தொகுதியின் சாய்ந்தமருது பிரதேசத்தில் தான் மேற்கொண்ட அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அதாவுல்லாஹ், அங்கு காலம் காலமாக இருந்து வந்த வைத்தியசாலை சுனாமியால் முற்றாக சேதமுற்றதன் காரணாமாக அம்மக்களுக்காக வைத்தியசாலை ஒன்றை அமைக்கவேண்டிய அவசர தேவை இருந்தது. 

அதனை குறித்த இடத்தில் அமைப்பதில் சிலருக்கு விருப்பமின்மை இருந்தது இந்நிலையில் சாய்ந்தமருது மக்களுக்காக வைத்தியசாலையை அவர்கள் விரும்பிய இடத்தில் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை நாங்கள் செய்தோம் அதனூடாக கம்பீரத்துடன் அங்கு வைத்தியசாலை காட்சியளிக்கின்றது. பிரதேச செயலகத்தை அமைத்தோம் வீதிகளை புனரமைத்தோம் நீர்விநியோக சபையின் பொறியலாளர் பிரிவை அமைத்தோம் பாலங்கள் அமைத்தோம் அவர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் உள்ளுராட்சி சபையை நிறுவுவதற்காக, கல்முனையில் வாழும் எந்த பிரதேசத்துக்குமோ சமூகத்துக்குமோ பாதிப்பு ஏற்படாத வகையில் நான்கு வலயங்களாகப் பிரித்து கல்முனைக்கு மாநகரசபையும் சாய்ந்தமருது உள்ளிட்ட ஏனைய மூன்று பிரதேசங்களுக்கும் நகரசபையும் வழங்க இருந்த நிலையில் அம்முயற்ச்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் தடுக்கப்பட்டதையும் மக்கள் அறிவர் என்றும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை விடயத்தில் பல்வேறு முன்னெடுப்புக்களை செய்த எங்களிடம் பேசாத சாய்ந்தமருது பள்ளிவாசல் சமூகம் எதையுமே செய்து காட்டாத நாங்கள் தான் தலைவர்கள் என்று கூறிக் கொண்டிருப்பவர்களின் பின்னால் அலைவது கவலையான விடயம் என்றும் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபையை தேசிய காங்கிரசே பெற்றுக்கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.

முன்னாள் கல்முனை முதல்வர் சிராஸ் பற்றி கருத்துத் தெரிவித்த அதாவுல்லாஹ், தங்களுடன் அவர் இருந்திருந்தால் அமையப்போகும் பாராளமன்றத்துக்கு தேசிய காங்கிரசின் சார்பில் அவர் சென்றிருப்பார் என்றும் அவசரப்பட்டுவிட்டதாகும் அவருக்கு அப்படியான பாக்கியத்தை இறைவன் வழங்கவில்லை போலும் என்றும் தெரிவித்தார்.

இம் மக்களுக்கு எதையுமே செய்யாமல் தாங்கள் இங்கு பேசவில்லை என்று கூறிய அதாவுல்லாஹ், மனச்சாட்சியுள்ள மக்கள் தேசிய காங்கிரசையே ஆதரிப்பார் என்றும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தை பொதுஜன ஐக்கிய முன்னணியே கைப்பற்றும் எனக்கூறிய அவர், கடந்தகால தேர்தல் முடிவுகளை பாடமாகக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். கண்டித் தலைமைத்துவமோ அல்லது வன்னித் தலைமைத்துவமோ தங்களுக்குச் சவால் இல்லை என்று தெரிவித்த தேசிய காங்கிரசின் தலைவர், வன்னித் தலைமைத்துவத்தின் வருகையால் தங்களது வாக்கு வங்கியில் சரிவு எதனையும் ஏற்படுத்தவில்லை என்றும் அது மாவட்ட ரீதியில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த அம்பாறை மாவட்டத்திலேயே பிறந்து இம்மக்களுடன் இரண்டறக்கலந்து இவர்களது சுழிவுகள் நெளிவுகளை அறிந்த தேசிய காங்கிரசின் தலைமை உள்ளிட்ட குழுவினரை ஆதரிப்பதன் ஊடாக மட்டுமே இப்பிராந்திய மக்களின் அபிலாசைகளை அடைந்து கொள்ள முடியும் என தெரிவித்த அதாவுல்லாஹ், இப்பிராந்திய எதிர்கால சிறார்களின் நன்மைகருதி ஒன்றுபடுமாறும் பணத்துக்கோ அல்லது ஆசைவார்த்தைகளுக்கோ அடிபணியாது நம்மை நாமே ஆளவேண்டும் என்ற அடிப்படையில் இப்பிராந்திய மக்களின் தேவைகளை அறிந்து செயற்படும் தேசிய காங்கிரசின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் கட்சி ஆதரவாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அதாவுல்லாஹ், மக்களிடம் சென்று உண்மையைக் குறி அவர்களிடம் ஆதரவைக்கோருமாறும் உண்மை மட்டுமே வெல்லும் என்றும் தெரிவித்தார். இறுதியில் மக்கள் தாமாகவே முன்வந்து முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் உள்ளிட்ட குழுவினரை ஆதரிப்பது என விசுவாசப் பிரமாணம் மேற்கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -