துமிந்த திஸாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது வான் மோதல்...!

அநுராதபுரம் ரபேவ பகுதியில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் ஓட்டிச் சென்ற வான் ஒன்றில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் 05 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் ரபேவ பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீதே குறித்த வான் மோதியுள்ளது.

மதவாச்சியில் இருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற வான் இவர்கள் மீது மோதிக் கொண்டு சென்றதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த 04 ஆண்கள் உட்பட பெண்ணொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்தவர்களில் இருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வானை ஓட்டிச் சென்றவர் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் என்பதுடன் மிஹிந்தலை பொலிஸாரினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிசாரால் மேற்கொள்ளபட்டு வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -