சுகாதார அமைச்சராக தவம் நியமிக்கப்படுவாா் - மாகாண சபை உறுப்பினா் ஏ.எல்.எம்.நஸீர் உறுதி

ஏ.எல்.றமீஸ்-

க்கரைப்பற்று பிரதேசத்துக்கு முஸ்லிம் சமூகத்தின் ஒட்டு மொத்த ஆசிர்வாதத்துடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவி எதிர்வரும் 18ம் திகதி வழங்கப்படவுள்ளன என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் அருகாமையில் இடம் பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நஸீர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் முன்னால் அமைச்சர் இம் முறை இத் தேர்தலில் தொல்வியடைவுள்ளார் என்பது சிறு பிள்ளைக்கும் தெரிந்த விடயம்.இதன் மூலம் அக்கரைப்பற்றின் அரசியல் அதிகாரம் இல்லாமற் போய் விடுமோ என்று சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர்;.அக்கரைப்பற்று பிரதேசம் இந்த நாட்டிலேயே சிறந்த கல்வியாளர்களை கொண்ட மண். இப் பிரதேசத்தை தலைமை தாங்குபவர்கள் பின் கதவால் அமைச்சுப் பதவிகளை பெற்ற வராலாறுகள்தான் இன்று வரை இருந்து வருகின்றது.முதன் முறையாக முஸ்லிம் சமூகத்தின் அங்கிகாரத்தோடு சிறந்த சமூக சிந்தனையாளனாகிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத் துறை,சமூக சேவை நலன்புரி, கிராமிய மின்சாரம்,சிறுவர் அபிவிருத்தி,மகளீர் விவகார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.

இவ் அமைச்சின் மூலம் அக்கரைப்பறறை மாத்திரமல்ல முழு கிழக்கு மாகாணத்தையும் அபிவிருத்தி செய்யக் கூடிய அதிகாரம் அக்கரைப்பற்றுக்கு கிடைக்கவுள்ளது.

அபிவிருத்தி என்பது முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்த வரைக்கும் முக்கியமான விடயமல்ல எமது சமூகத்தின் பாதுகாப்பே பிரதானமானது.பாதுகாப்பும் அபிவிருத்தியும் என இரண்டையுமே இன்று நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கு நமது முன்னாள் அமைச்சர் அதாஉல்லா துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கின்றார்.மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிலைச் சின்னத்துக்கு நம் சமூகம் வாக்களிக்குமானால் கடந்த காலங்களில் எமது சமூகத்துக்கு ஏற்பட்ட அவல நிலை மீண்டும் தலை தூக்கும்.

அதாஉல்லாவின் குடும்பம் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவர முடியாது.இலங்கையில் வாழும் இருபது இலட்சம் மக்களின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விடயம் எனவே ஒவ்வொறு முஸ்லிமும் மிகவும் கவணமாக சிந்தித்து செயற்பட வேண்டிய காலமிது. வெற்றிலையை தோற்கடிக்க ஒன்றுபடுவோம்.அக்கரைப்பற்றுக்கு அதிகாரத்தைப் பெறுவோம் என நஸீர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -