நெல்லை களஞ்சியப்படுத்த இடம் போதாது போனால், மத்தள விமான நிலையத்தில் அவற்றை களஞ்சியப்படுத்த போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹசலக பிரதேசத்தில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். த்தள விமான நிலையத்திற்கு விமானங்கள் வரவில்லை என்றால், நெல்லை அங்கு களஞ்சியப்படுத்துவோம்.
நாங்கள் இந்த போகத்தில் ஒரு கிலோ நெல்லை 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்வோம். கிராமங்களுக்கு உதவ வேண்டும் என்பதே எனது தேவை.
60 மாதங்களில் புதிய நாட்டை உருவாக்க எதிர்ப்பார்த்துள்ளோம். பொருளாதாரத்தை முன்னேற்றவே நாட்டில் முதல் இடம் வழங்கப்படும்.
இந்த போகத்தில் ஒரு கிலோ நெல்லை 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.