தர்ஜுமில்லத்-
பொத்துவில் தொண்டர்கள் அமைப்பின் மாபெரும் கொள்கை பரப்புக் கூட்டம் (2015.08.02) 04:30 மணியளவில் அல்-ஹைறாத் பள்ளிவாசல் அருகில் இடம்பெற்றது.
குறித்த கூட்டம் உலமாசபை, அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம், அரச சார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், பொது சமூகமட்ட நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற கல்வியியலாளர்கள், சட்டத்தரணிகள், வர்தகர்கள், ஊரின் முக்கியஸ்தகர்கள், ஊர்ப்பற்று மிக்க துடிப்புள்ள இளைஞர்கள் ஆகியோர்களின் ஆலோசனையின் பேரிலும் வழிகாட்டலின் அடிப்படையிலும் தமது கொள்கைகளை விளக்கும் கூட்டமாக நடைபெற்றது.
மேலும் குறித்த தொண்டர் அமைப்பானது 100% அரசியல் கட்சி சாராததாகவும், அண்மைக்காலமாக ஒவ்வொரு இளைஞர் குழுக்களும், ஊரில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பாக சிந்தித்தும் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் தருணத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2015 வந்து எமது ஊரை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கின்ற தற்போதைய இந்நிலையில் பொத்துவில் அரசியல் வாதிகளினதும், கட்சிகளினதும் பொத்துவில் தொடர்பான தான்தோன்றித்தனமான முடிவுகளினால் அதிருப்தியுற்ற இளைஞர்கள் ஒன்று கூடி உருவாக்கியிருப்பதுடன், இவ்வமைப்பின் முதல் முயற்சியாக எதிர் காலத்தில் சிறந்த ஒரு அரசியல் கலாசாரத்தினை பொத்துவிலில் உருவாக்குவதற்காகவும், பேண்தகு அபிவிருத்தியை பொத்துவிலில் ஏற்படுத்துவதற்காகவும், சமூக, கலாசாரம் சார்ந்த விடயங்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதுடன், பொத்துவில் ஊருக்கென 100% மக்களின் ஆலோசனைகளைப் பெற்று பொத்துவிலில் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கொள்கையாக இவ்வமைப்பு தமது கொள்கைப் பிரகடனத்தை தெளிவுபடுத்தியது.
மேலும் குறித்த தொண்டர் அமைப்பானது பொத்துவிலுக்கென உருவாக்கப்பட்டது. இது ஒரு தனிப்பட்டவர்களின் அமைப்பு அல்ல. இதற்கு ஒத்துழைப்பு நல்க விரும்பும் அனைத்து பொத்துவில் வாழ் பொதுமக்களும் குறித்த தொண்டர் அமைப்பில் அங்கத்தவராகுமாறும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதுடன், இது தொடர்பில் மக்களின் ஆலோசனைக் கருத்துகளும் கோரப்பட்டது.
குறித்த தொண்டர் அமைப்பினால் மக்களின் பூரண ஒத்துழைப்பினைப் பெற்றும் பேரம் பேசும் அடிப்படையில் பொத்துவிலுக்கான எதிர் கால சிறந்த ஒரு அரசியல்கலாசாரத்தினை பொத்துவிலில் உருவாக்குவதற்காகவும், பேண்தகு அபிவிருத்தியை பொத்துவிலில் ஏற்படுத்துவதற்காகவும், சமூக, கலாசாரம் சார்ந்த விடயங்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதற்காகவும் பலம் சேர்க்கும் வகையில் அனைத்து பொத்துவில் வாழ் மக்களினதும் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதுடன், குறித்த அமைப்பின் அனைத்து செய்பாடுகளும் ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்களின் பூரண ஆலோசனையுடன் மாத்திரமே இடம்பெறும் எனவும் கூறப்பட்டது.