இக்பால் அலி-
சர்வதேச இஸ்லாமிய எதிரிகளின் சூழ்ச்சிலிருந்து எமது நாட்டு முஸ்லிம் இளைஞர்களைப் பாதுகாப்பதற்கு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை துரித நடவக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இலங்கையிலுள்ள அனைத்து ஜும்ஆப் பள்ளிவாசல்களின் மிம்பர் மேடைகளிலும் பரப்புரை செய்வதற்கு இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கும் அறிவுரை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பாக குருநாகல் மாவட்ட முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குருநாகல் சிட்டி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவரும் குருநாகல் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் சமூக நலப் பொறுப்பதிகாரியுமான அஷ்ஷெய்க் ஜே. எம். இம்ரான் தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் குருநாகல் தம்புள்ள வீதியிலுள்ள விருந்துபசார மண்டபத்தில் தலைவர் அஷ்ஷெய்க் எம். ஐ. சுஐப் தலைமையில் நடைபெற்றது அந்நிகழ்வில் விசேட வளவாளராகக் கலந்து கொண்ட குருநாகல் சிட்டி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவரும் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநி அஷ்ஷெய்க் ஜே. எம். இம்ரான் அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்;
இஸ்லாமிய எழுச்சியை நாசப்படுத்த வேண்டும் இஸ்லாமிய வளர்ச்சியை நாசப்படுத்த வேண்டும் என்ற ரீதியில் காலத்துக்குக் காலம் ஏராளமான சூழ்ச்சிகள் உலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அல்லாஹ்வுடைய பிரகாசத்தை அழிக்க வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இருந்த போதும் அல்லாஹ் தஆலா பூரணப்படுத்துவான் என்ற செய்தி குர்ஆனில் நாங்கள் காணுகின்றோம்.
இந்த அடிப்படையில் அல் கையிதா என்ற அமைப்பிலுள்ள உஷாமா பில்லேடனின் பிரச்சினைய இருந்தது. அது பாரியளவில் காணப்பட்டது, அமெரிக்காவில் வேல்ட் சென்டர் தாக்குதலுக்கு உள்ளான பின்பு அன்று 24 மணித்தியாலயத்திற்குள் இது வந்து வேறு யாரும் இல்லை.
இது வந்து அல் தலிபான் உஷாமா பில்லேடன் தான் செய்து இருக்கிறார் என்று தி;ட்டவட்டமாக அமெரிக்கா உடனே அறிவித்தது. இதற்குப் பின்னால் யார் இருக்கிறார் என்பது பெரிய பிரச்சினையாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஈராக்கில் போர் ஆரம்பிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் ஆரம்பிக்கப்பட்டது.; இதனால் பாரிய ஒரு இழப்பை முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கியதை நாங்கள் பார்க்கின்றோம்.
இப்போது நவீன பிரச்சினை என்னயெனில் ஐ எஸ் ஐ எஸ் என்ற அமைப்பை ஆமெரிக்காவும் ஈரானும், யுதர்களும் சேர்ந்து ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற செய்திகள் திட்டவட்டமாக வெளியாகியுள்ளன. எங்களுடைய சமூகம் தெரியாமல் அறியாமல் மாட்டிக் கொள்கின்றார்கள். இலங்கையிலுள்ள கலேவேவலையைச் சேர்ந்த எமது சகோதரர் இணைந்து மரணமடைந்துள்ளார்.
இது எங்களைப் பொறுவத்தவரையில் முக்கியமான பிரச்சினையாக தற்போது எழுந்துள்ளது. இந்தச் செய்தி தேர்தல் காலம் என்பதால் பொது பல போன்ற அமைப்புகளுக்கு பெரிய பொக்கிசம் கிடைத்தமாதரி. இந்தச் செய்தியை மேற்கொள்காட்டி அவர்களுடைய ஊடக அறிக்கை சுடச் சுட வெளியிட்டார்கள்.
பார்;த்தீர்களா இது பற்றி முன்னர் அறிவித்தோம் எனப் பூதரகமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இலங்கையிலுள்ள இஸ்லாமிய சமூக நிறுவனங்கள், அமைப்புக்களெல்லாம் பயங்கரவாதக் குழுக்களோடு இரகசியத் தொடர்பு இருக்கிறது.
இவர்களுக்கு பாரியளவில் நிதி வருகிறது என அவர்களுடைய ஊடக அறிக்கையில் வெளிக் கொணர்ந்தார்கள். அது மட்டுமல்ல அவர்களுடைய வாய்பாடத்திலுள்ள அமைப்புக்களை வெளிப்படுத்தினார்கள்.
இது தொடர்பாக எமது தலைமையகம் அறிக்கையொன்றை வெளியிட்டது. ஐ. எஸ். ஐ. எஸ் என்ற அமைப்பு எங்களுடைய நாட்டுக்கு அவசியமற்ற ஒன்று. . இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமானது. இந்தப் பயங்கரவாதக் குழுக்களோடு இப்படித் தொடர்பு இருக்கமெனக் கண்டால் இதனை இல்லாமற் செய்வதற்கு முழு ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்குவோம் எனவும் இதற்கு கடுமையான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஊடக அறிக்கையை வெளியிட்டதற்கு பிற்பாடு இந்தப் பிரச்சினையை தொடர்பாக யாருமே பேசுவதில்லை.
எங்களுடைய சமூகத்திலுள்ள முக்கிய பிரச்சினை என்னவெனில் பிரச்சினைகள் சமூகத்திற்கு வரும் போது அந்ததந்த சந்தர்ப்பத்தில் உரிய பதில் வழங்கி தெளிவு படுத்தப்படுதல் வேண்டும். இது எங்கள் மத்தியில் பாரியளவிலான பலவீனத் தன்மை காணப்படுகிறது
அப்போது பொதுபல சேனாவின் அறிக்கையில் வஹாபிசம் இருப்பதாக 2004 ஆம் ஆண்டுதான் எங்களுக்கு முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் சொன்னார் என சுட்டிக்காட்டுக் காட்டினார்கள்..
அதேபோல இந்த நாட்டில் அடிப்படை வாதிகள் இருப்பதாக என முஸ்லிம்களில் ஒருவர் சொன்னார் என்று கூறினார்கள்.. நாங்கள் அந்த நேரத்தில் அந்த அரசியல் பிரமுகரை அழைத்து அவருக்கு நாங்கள் விளக்கமளிக்க வில்லை. 2004 ஆம் ஆண்டில் அந்த அரசியல் பிரமுகர்களிடம் வஹாபிசம் பற்றி நாங்கள் தௌபடுத்த வில்லை. வஹாப்பிசம் பற்றியும் தப்லீக் பற்றியும் உலமாக்கள் மட்டும் தான் பேச முடியும்..
அரசியல் வாதிகளால் இது தொடர்பாக பேச முடியாது என்ற விளக்கத்தையாவது நாங்கள் அவருக்கு சொல்லியிருக்க வேண்டும். அது நடைபெறவில்லை.
அந்த நேரத்தில் குறிப்பிட்ட முஸ்லிம் நபரை அழைத்து அறிவுரை சொல்லவுமில்லை. இங்கு என்னவென்றால் தப்லீக் காரர்களுக்கு தாக்குதல் விழும் போது ஜமாஆத்தே இஸ்லாமியருக்கு சந்தோசம். ஜமாத்தே இஸ்லாமியருக்கு தாக்குதல் நடக்கும்; போது தப்லீக் காரர்களுக்குச் சந்தோசம். இவை போல அடுத்தடுத்து ஜமாஅத்துக்கு அடி விழும் போது இன்னுமொரு ஜமாஅத்துக்கு சந்தோசம். எல்லோருமே பிளவு பட்டிருப்பதால் இந்தளவு பாதிக்கும் என யாருமே யோசிக்க வில்லை. இப்பொழுது ஒட்டு மொத்தமாக எல்லோரும் அடிப்படைவாதகள்p என எம்மை கூறுகின்றனர்.
இதுவொரு சமூகப் பிரச்சினை. எந்தவொரு சமூகம் பாதிக்கப்பட்டாலும் அந்த நேரத்தில் நாங்கள் ஒன்றுபட்டு இது எமது சமூகப்பிரச்சினையாக எடுத்து முகம் கொடுக்க வேண்டும்.
எல்லா மார்க்க அறிஞர்களுக்கு உணர்த்தபட வேண்டும். ஜம்ஆப் பள்ளிவாசல்களிலும் இந்த முக்கிய மான பிரச்சினை சம்மந்தமாகச் சொல்லப்பட வேண்டும். தலைமையகம் தீமானித்துள்ளது.
முக்கியமான பிரச்சினை தொடர்பாக நாங்கள் யோசிப்பதில்லை. பிரச்சினைகள் உள் நுழைந்து பிற்பாடுகள்தான் நாங்கள் யோசிக்க முற்படுவது.
இது தொடர்பான பிரச்சினை தடுப்பதற்காக குருநாகல் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிவாசலகளுக்கு மார்க்க அறிஞர்களுக்கு கட்டுமையாக அறிவுறத்தல் விடுப்பதோடு சர்வதேச இஸ்லாமிய எதிரிகளின் சூழ்ச்சிலிருந்து எமது முஸ்லிம் இளைஞர்கள் பாதுகாப்பதற்கு துரித நடவடிக்கை உலமாச சபை நடடிவ்கை எடுக்கவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மறைந்த மனாருள் ஹுதா அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் ஹலால்தீன் அவர்களுக்கு ஞாபகார்த்த நிகழ்வு நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் செயலாளர் அஷ்ஷெய்க் இஷாக் லெப்பை உள்ளிட்ட ஏ. ஜீ. பௌமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.