நவாஸ் சௌபி -
வன்னியில் உள்ள தலைமை தனது அமைச்சின் மூலம் ஒலுவில் கிராமத்தில் ஒரு தையல் பயிற்சி நிலையத்தை உருவாக்கி அதில் நாற்பதற்கும் அதிகமான யுவதிகளை பயிற்சி பெறச் செய்திருக்கும் இந்த முயற்சி அவரோடு இணைந்து அவரது கட்சியில் தேர்தல் கேட்கும் எங்களையும் பெருமைப்படுத்தியிருக்கிறது.
என அகில இலங்கை மக்கள் காங்கிஸின் மயில் சின்னத்தில் 5 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் கல்முனையின் மேயர் சிராஸ் மீராசாஹிப் குறிப்பிட்டார்.
நேற்று 30.07.2015 வியாழக்கிழமை ஒலுவிலில் தனக்கான தேர்தல் பிரச்சாரக் கிளையினை திறந்து வைக்கும் முகமாக ஒலுவில் சென்ற போது அங்குள்ள தையல் பயிற்சி நிலையத்தை பார்வையிட்டு அங்கு பயிற்சி பெறும் யுவதிகளைச் சந்தித்து அவர்களது தேவைகளைக் கேட்டறிந்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதுவரை காலமும் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்த இந்த ஒலுவில் மக்களுக்கு அதன் தலைமை பல அமைச்சுக்களைப் பெற்ற போதும் அதனைக்கொண்டு பாரிய வேலைத்திட்டங்கள் எதனையும் செய்யவில்லை என்றும், இந்த ஒலுவில் மண்ணில் பல அழிவுகள் ஏற்பட்டிருக்கும் நிலையிலும் அந்தக் கட்சியால் எங்களுக்கு எதுவித விமோசனங்களும் கிடைக்கவில்லை எனவும் முஸ்லிம் காங்கிரஸ் மீதும் அதன் தலைமையின் மீதும் விரக்தியுற்ற மக்கள் பலரும் தங்களது ஆதங்கங்களை என்னோடு பகிர்ந்துகொண்டார்கள்.
இந்நிலையில் எமது தலைமை றிசாட் அவர்கள் இந்த மக்கள் தனது கட்சிக்கு வாக்களித்தார்களா இல்லையா என்றெல்லாம் பாராது, தனது அமைச்சின் மூலம் ஒலுவில் கிராமத்தில் ஒரு தையல் பயிற்சி நிலையத்தை உருவாக்கி அதில் நாற்பதற்கும் அதிகமான யுவதிகளை பயிற்சி பெறச் செய்திருக்கும் இந்த முயற்சி அவரோடு இணைந்து அவரது கட்சியில் தேர்தல் கேட்கும் எங்களையும் பெருமைப்படுத்தியிருக்கிறது.
நாங்கள் இன்று ஒரு பொருத்தமான தலைமையின் பின்னாலும் முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கு பாதுகாப்புத் தேடக்கூடிய அதன் கட்சியின் பின்னாலும் இந்த தேர்தலை எதிர்கொள்வதன் காரணம் முஸ்லிம் காங்கிரஸின் ஏமாற்று அரசியலுக்கு அடிமையாகிக்கிடக்கும் எமது அம்பாரை மாவட்ட அரசியலுக்கு ஒரு மாற்றுப் பாதையை உருவாக்கி எமது மக்களை மாற்றத்தை நோக்கிய புதிய அரசியல் யுகத்துக்கு அழைத்துச் செல்வதற்கே ஆகும்.
இதற்கு உங்களைப் போன்ற இளைஞர் யுவதிகள் எங்களோடு கைகோர்த்து அணிதிரண்டு வரவேண்டும் எனவும் அவர் அங்கு கருத்து தெரிவித்தார்.