யாழ்.சனசமூக நிலையத்தில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு - நீதவான் உத்தரவு

பாறுக் ஷிஹான் -

யாழ்.குருநகர் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நடத்துமாறு, யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

சடலத்தை இன்று காலை சட்டவைத்திய அதிகாரியுடன் சென்று பார்வையிட்ட நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்ததோடு, உயிரிழந்தவரின் மனைவியிடம் வாக்குமூலமும் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, நீதவானின் உத்தரவிற்கமைய சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. யாழ்.குருநகர் பகுதியில் அமைந்துள்ள சனசமூக நிலைய கட்டிடத்தில் இருந்து குறித்த சடலம், இன்று காலை கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.சனசமூக நிலையத்தில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு யாழ்.குருநகர் பகுதியில் அமைந்துள்ள சனசமூக நிலையத்தில், ஆணொருவரின் சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலமாக கண்டெடுக்கப்பட்டவர், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான அந்தோனிப்பிள்ளை கமல் (வயது – 35) என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் நேற்று இரவு அங்கு நடைபெற்ற இசைநிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பாத நிலையில், இன்று அதிகாலை அயலவர்களால் இனங்காணப்பட்டுள்ளார்.

எனினும் மரணம் குறித்த காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலம், சட்டவைத்திய அதிகாரி மற்றும் நீதவான் விசாரணையை அடுத்து யாழ் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -