ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பாளர் அமீர் அலியினது தேர்தல் நடவடிக்கைகள் கல்குடாவில் அதிகரித்து வருகின்றமை காரணமாகவும், கல்குடாவில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மீதும், அதன் தலைமையின் மீதும் அதிருப்தியுடன் இருக்கும் மூத்த கங்கிரஸ் முக்கியஸ்தர்களை சந்தித்து கல்குடாவில் போட்டியிடுகின்ற றியாலின் ஆதரவினை அதிகரிக்குமாக 31.07.2015 காலை வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் திடீரென ஹெலியில் வந்திறங்கிய சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அதிருப்தியுடன் இருக்கும் முஸ்லிம் காங்கிரசின் மூத்த உறுப்பினர்களை சந்தித்து சமரசம் செய்ய சென்றார்.
இதன் முதற் கட்ட சந்திப்பாக வாழைச்சேனையை சேர்ந்த முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இஸ்மாயில் ஹாஜியின் வீட்டுக்குச் சென்ற அமைச்சர் ரவூம் ஹக்கீமிடம் முஸ்லிம் கங்கிரசின் போராளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதனை காணக்கூடியதாக இருந்தது. இதன் பொழுது கட்சியின் தலைமையானது கல்குடா பிரதேசத்திற்கு கடந்தகாலங்களில் விடப்பட்ட பிழைகளை ஏற்றுகொண்டதோடு வருக்கின்ற தேர்தலில் வேட்பாளர் றியாலின் வெற்றினை உறுதிப்படுத்தும் முகமாக வாழைச்சேனை பிரதேசத்தில் கைவிடப்பட்ட போராளிகளை ஒருங்கினைத்து அவர்களை வழி நடாத்தும் முகமாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜியினை சமரசம் செய்து இறுதியில் வாழைச்சேனை பிரதேசத்திற்கான முஸ்லிம் காங்கிரசின் தேர்தலுக்கான தலைமையாகவும் ஹக்கீமினால் பிரகடணம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து வாழைச்சேனை குர்ஆன் மத்ர்ஸ்ஸா மற்றும் முஸ்லிம் காங்கிரசின் மூத்த முக்கியஸ்தர்களான வாழைச்சேனையை சேர்ந்த அஸீஸ் ஹாஜி, ஓட்டமாவடியை சேர்ந்த ஹனீஃபா ஹாஜி ஆகியோர்களின் வியாபார நிலையங்களுக்குச் சென்று சமரச நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் காவத்தமுனை பிரதேசத்திற்கும் விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் பொழுது கருத்து தெரிவித்த வேட்பாளர் றியால் தான் வேட்பு மனு தாக்கள் செய்ய தினத்தன்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் முதன் முதலில் வாழைச்சேனை பிரதேசத்திற்கு சென்று இஸ்மயில் ஹாஜியினை சந்திக்குமாறு வேண்டியதாகவும், அதற்கு முன்பாகவே இஸ்மாயில் ஹாஜியினை சந்தித்தாகவும் தெரிவித்த றியால் தான் வாழைச்சேனையில் எவ்வாறு தனது அரசியல் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதென்று சிந்தித்து கொண்டு இருக்கையிலே தற்பொழுது இஸ்மாயில் ஹாஜி வாழைசேனையின் தலைமைப் பொறுப்பினை ஏற்று கொண்டுள்ளமையானது தனக்கு மிகவும் ஆறுதல் அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தினை தெறிவித்த றியால், தான் வாழைச்சேனைக்கு அறிமுகம் இல்லாதபடியினாலேயே தான் பிறந்த ஊரான மீராவோடையில் தனது தேர்தல் காரியாலையத்தினை அமைத்ததாகவும் வருக்கின்ற தேர்தலில் தனது வெற்றியின் பிற்பாடு முதன்மைப்படுத்தப்பட்ட அபிவிருத்தியாக வாழைச்சேனை அன்னூர் தேசிய பாடசாலையினை அபிவிருத்தி செய்யப்படும் என வாழைச்செனை பொராளிகள் முன்பாக தனது தேர்தல் வாக்குறுதியினை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், வேட்பாளர் அலிசாஹிர் மெளலான, முன்னாள் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் வாஸ்தீன், ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.