புகைத்தல் மற்றும் போதைவஸ்து சம்பந்தமான விழிப்புணர்வுச் செயலமர்வு...!

நிஸ்மி, அக்கரைப்பற்று-

தேசிய போதை ஒழிப்பு மாதத்தை முன்னிட்டு (09.07.2015- 09.08.2015) கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலக தொற்றா நோய்ப் பிரிவின் அனுசரணையுடன் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான புகைத்தல் சம்பந்தமான விழிப்புணர்வுச் செயலமர்வு நேற்று முன்தினம் (30) வியாழக்கிழமை அக்கரைப்பற்று முஸ்லிம் ஆண்கள் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அலுவலக சிரேஷ்ட பொதுச் சுகாhரப் பரிசோதகர் ஏ.எச்.பௌமி தலைமையில் இடம் பெற்ற இச் செயலமர்வில் கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலக தொற்றா நோய்ப் பிரிவின் சுகாதாரக் கல்வி உத்தியோகத்தர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் அஷ்-ஷேய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான், சிரேஷ்ட பொதுச் சுகாரப் பரிசோதகர் ஏ.எச்.பௌமி, முஸ்லிம் ஆண்கள் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.நயீம் ஆகியோர் கலந்து கொண்டு புகைத்தலால் ஏற்படும் பாதிப்பக்கள பற்றி மாணவர்களுக்கு படக் காட்சியுடனான செயலமர்வை நடாத்தினார்கள். வித்தியாலய ஆசிரிய, ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.





நிஸ்மி, அக்கரைப்பற்று.

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களமும், அக்கரைப்பற்று பிரதேச செயலக சமூக அபிவிருத்திப் பிரிவும் இணைந்து அக்கரைப்பற்று முனவ்வறா ஜுனியர் கல்லூரி மாணவர்களுக்காக நடாத்திய போதைவஸ்து சம்பந்தமான விழிப்புணர்வுச் செயலமர்வு நேற்று (30) வியாழக்கிழமை கல்லூரி மண்டபத்தில் அதிபர் ஏ.ஜி.அன்வர் தலைமையில் இடம் பெற்றது.

என்றும் போதையற்ற சமூகமே நாட்டுக்குத் தேவை என்ற தொனிப் பொருளில் இடம் பெற்ற இச் செயலமர்வில் தேசிய அபாயகரமான ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வெளிக்கள செயற்றிட்ட உத்தியோகத்தர் ஏ.காலித், அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் அஷ்-ஷேய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள முகாமையாளர் எம்.எல்.ஜாபீர், உளவளத்துணை உத்தியோகத்தர் எஸ்.ஆப்தீன் ஆகியோர் மாணவர்களுக்கு போதைவஸ்து சம்பந்தமான விளக்கங்களை வழங்கினார்கள்.

இதன்போது அக்கரைப்பற்று பிரதேச செயலக சமூக அபிவிருத்திப் பிரிவு சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.ஸியாட் அஹமட், முனவ்வறா ஜுனியர் கல்லூரி ஆசிரியர் எம்.நஸீர் உட்பட ஆசிரிய, ஆசிரியைகள்; மற்றும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -