முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க சற்று நேரத்திற்கு முன்னர் ஐக்கிய தேசிய முன்னணி கம்பஹா மாவட்ட வேட்பாளர் அர்ஜுன ரணதுங்கவின் மகர பிரதேசத்தில் அமைத்துள்ள அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அங்கு சென்று அர்ஜுன ரணதுங்கவுக்கு தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் எவ்வாறு மேற்கொள்வதென அறிவுரை வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.
எப்படியிருப்பினும் இதற்கு முன்னர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ஜுன ரணதுங்க உட்பட ஐவரின கட்சி உறுப்புரிமையை இரத்து செய்தமையினால் கட்சி ஆலோசகர் என்ற ரீதியில் அவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்வதில் பிரச்சினை எனவும் அவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அவர் குறித்த ஐவரின் கூட்டங்களில் கலந்துகொள்ளா விட்டாலும் அவர்களுக்கு தொடர்ந்து அறிவுரைகள் வழங்குவார் என தெரியவந்துள்ளது.