அபு அலா –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் 3 வேட்பாளர்களையும் ஆதரித்து அட்டாளைச்சேனை 17 பிரிவுகளிலும் தேர்தல் பிரச்சார நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை (02) வீட்டுக்கு வீடு முன்னெடுக்க ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அட்டாளைச்சேனை அமைப்பாளரும், மத்திய குழுத் தலைவருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை 8 ஆம் பிரிவு கோணாவத்தை ஜூம்ஆப் பள்ளிவாயலில் விஷேட துஆப் பிரார்த்தனையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான பைசால் காசிம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளரும், அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ், ஐ.எல்.முனாப், மற்றும் கட்சியின் மூத்த போராளிகள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றிருந்தனர்.
இந்த வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று அட்டாளைச்சேனை 17 கிராம சேவகர் பிரிவுகளிலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அட்டாளைச்சேனை அமைப்பாளரும், மத்திய குழுத் தலைவருமான ஏ.எல்.எம்.நஸீர் கலந்து கொண்டு மு.காவின் போராளிகளை வீட்டுக்கு வீடு சந்தித்து உறவாடி தனது வேட்பாளர்களின் அறிமுக அட்டைகள், துண்டுப் பிரசுரங்கள், தொப்பிகள், ஸ்டிக்கர்கள் போன்றன வழங்கி வைத்து முன்னெடுக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.