MP மாருக்கு ஒரு “மசிரும்” கிடைக்கவில்லை -ஹரீஸ் ஆவேஷம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அட்டாளைச்சேனைக் கோணாவத்தைக் கிராமத்தில் நேற்று இரவு முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் கிழக்கு முதலமைச்சரின் ஊடக இணைப்பாளருமான எஸ்.எல்.முனாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இப் பிரச்சாரக்கூட்டத்தின் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு நீண்ட உரையொன்றினையாற்றினார்.

மகிந்தவின் குடும்ப ஆட்சியில் நாங்கள் ஏன் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டோம் என்று தெரியாமல் திகைத்துப்போய் இருந்தோம். அந்தளவு அன்று மகிந்த எங்களை ஒரு “ மசிருக்கும்” கணக்கெடுக்க வில்லை. எந்த ஒரு அபிவிருத்தியையும் எங்களை சரியாகச் செய்ய சந்தர்ப்பம் தரவில்லை என்று ஆவேஷாம உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து அங்கு அவர் உரை நிகழ்த்துகையில்:

இன்று நாட்டில் நல்லாட்சி மேலோங்கியிருக்கும் இக்கால கட்டத்தில் பாராளுமன்றம் செல்லும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பெரும் சலுகைகள் அதாவது மக்களின் அபிலாசைகளை தேவையான ஊர்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்வதற்கு சந்தப்பம் வழங்கப்படும். அப்படி ஒரு சிறந்த ஆட்சியை அமைக்க ஐக்கிய தேசிய முன்னனி வெற்றி பெற வேண்டும். மீண்டும் நம் நாடு இருண்ட யுகத்தை நோக்கிச் செல்ல முடியாது. அதற்காக மக்கள் நீங்கள் உங்களை தயார் படுத்தி நாமும், நமது மக்களும் நின்மதியாக வாழும் நாடாக நம் நாட்டை மாற்றியமைக்க சிறந்த அரசை நிர்மாணிப்பது நமது கடமையாகவிருக்கிறது.

ஆகவே நடைபெறும் இப்பொதுத் தேர்தல் மூலமாக அட்டாளைச்சேனை ஊரில் 30 வருடக் கனவு நனவாக இருக்கிறது. அதனை நிலைப்படுத்தவும் உயிர்ப்பிக்கவும் நாம் அனைவரும் திடமான நம்பிக்கை வைக்க வேண்டும். அதனை வென்றெடுக்க அயராது பாடுபடவேண்டும் என்றும் தெரிவித்தார்.
 எதிர்வரும் 18ஆம் திகதிக்குப் பிறகு அம்பாரை மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ள சில்லறைக் கட்சிகள் நாட்டை விட்டு விரண்டோடும் நிலைப்பாட்டை எடுக்கவுள்ளனர்.

அந்தளவு அவர்களை மக்கள் அவமானப்படுத்தி விரட்டியடிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே நீங்கள் யாரும் பசப்பு வார்த்தைகளுக்கு உங்களை மாற்றிக்கொள்ளாது ஆட்சியின் பங்காளர்களாக மாறியிருக்கும் இலங்கைத் தேசத்தின் முஸ்லிம்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பக்கம் அனைவரும் ஒன்று பட்டு உழைக்க முன்வாருங்கள் என்ரும் கேட்டுக்கொண்டார்.

இப்பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர்களான பைஷல் காசிம், மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம் மற்றும் பல கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -