நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு எதிர்கால சந்ததியினருக்காகவும் நாட்டின் அபிவிருத்திகாகவும் நிர்மாணிக்கப்பட்ட மத்தல விமான நிலையத்தை ராஜபக்சர்களை பழிவாங்கும் நோக்கில் தவறாக பயன்படுத்தப்படுகின்றமைக்கு கடுமையான கண்டனம் வெளியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
கடந்த அரசாங்கத்தினால் இலங்கையினுள் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களில் வெற்றியடைந்த ஒன்றான மத்தல சர்வதேச விமான நிலையத்தை தற்போதைய அரசாங்கம் நெல் கலஞ்சியசாலையாக பயன்படுத்துவதனை நான் அறிந்து கொண்டேன்.
இவ் விமான நிலையத்திற்கு நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு எதிர்கால சந்ததியினருக்காகவும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காகவும் நிர்மாணிக்கப்பட்ட விமான நிலையமாகும்.
இந் நாட்டில் அதிவேக பாதைகள் நிர்மானிப்பது போன்று விமான நிலையமொன்று நிர்மாணினிப்பதும் ஹம்பாந்தோட்டை புதிய துறைமுகம் அமைப்பதும் இந் நாட்டு அரசாங்கங்களுக்கு 1960ஆம் ஆண்டில் இருந்து காணப்பட்ட ஒரு கனவாகும்.
இது போன்று பெரிய அளவிலான திட்டங்களின் முழுமையான நன்மைகளை பெற்றுகொள்ள பல வருடங்கள் கழிந்து விட்டன.
மஹாவலி திட்டமும் அமைத்தவுடனே நன்மை கிடைத்து விடாது. துறைமுகங்கள், விமான நிலையங்கள் நிர்மாணிப்பதற்கு பல வருடங்கள் தேவைப்படுகின்றது.
உலகின் மிக பெரிய விமானத்தை மத்தல விமான நிலையத்தின் ஊடாகவே தரையிறக்க முடியும் என்பதனால் இந் நாட்டிற்கு மேல் பறக்கும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்ததோடு அதன் மூலம் நாட்டிற்கு கிடைக்கும் வருமானங்கள் அதிகரிக்கப்பட்டிருந்தன.
இந்த தேசிய சொத்துக்களை பயன்படுத்தி எங்கள் நாட்டின் 5 மாகாணங்களை அடிப்படையாக கொண்டு புதிய பொருளாதார வலயத்தினை உருவாக்குவது எங்கள் அனைவரினதும் தேசிய நோக்கமாகும்.
இதனால் கடந்த அரசாங்கத்தை அவமதிப்பதனை நோக்கமாக கொண்டு செயற்படுத்தும் இந்த முறையற்ற நடவடிக்கை உடனடியாக நிறுத்துமாறு நான் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.