ஊடகவியலாளர்கள் உண்மையை மட்டும் செய்தியிட வேண்டும் -ஊடக அமைச்சர்

டகவியலாளர்கள் உண்மையை மட்டும் செய்தி அறிக்கையிட வேண்டுமென ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

மீளவும் ஊடக அமைச்சர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டு அமைச்சர் கருணாதிலக்கவிற்கு, ரூபவாஹினிக் கூட்டுத்தாபன வளாகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் பங்கேற்று நேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.

முதலாவது, இரண்டாவது மூன்றாவதாகவும் ஊடகவியலாளர்கள் உண்மையை மட்டுமே செய்தி அறிக்கையிட வேண்டும்.

எனது அரசியல் வாழ்க்கையில் எல்லா காலங்களிலும் குற்றச்சாட்டுக்கள் எவற்றிலும் சிக்காமல் இருக்க பார்த்துக் கொண்டேன்.

எதிர்காலத்தில் நேர்மையாக செயற்பட முடிந்தளவு முயற்சி செய்வேன்.

ஊடகவியலாளர்கள் கட்சி, நிற அல்லது கொள்கைகளின் அடிப்படையில் செயற்படாது எல்லா சந்தர்ப்பங்களிலும் சுயாதீனமாக செயற்பட வேண்டும்.

ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட முடிந்தளவு வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.

அரசாங்க ஊடகத் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -