முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று பாரிய ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் முன்னிலையானார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, அரச ஊடகத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டமைக்கான கட்டணங்கள் செலுத்தாமை குறித்தே இவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசார குழுவின் தலைவராக இவரே செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் பாரிய ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.