கிழக்கு முதலமைச்சர் மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்களங்களுக்கு விஜயம்..!

ள்ளூராட்சி வாரத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் திணைக்களங்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நேரில் விஜயம் செய்து அரச காரியாலங்களின் வேலைத்திட்டங்களின் குறைபாடுகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகியவற்றை நேரில் கண்டறியும் நிகழ்ச்சி நிரலின் முதற்கட்டமாக இன்று செவ்வாய்க் கிழமை ஏறாவூர் நகர சபை, மட்டக்களப்பு மாநகர சபை, ஆரயம்பதி பிரதேச சபை ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டார்.

இது போன்று நாளை, நாளை மறுதினம் மற்றும் அடுத்த நாள் வரை சகல மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகள்,கல்வித் திணைக்களம்,போக்குவரத்து அதிகார சபை,கிராமிய அபிவிருத்தி சபை, கைத்தொழில் திணைக்களம், சுகாதார திணைக்களம், கட்டடத் திணைக்களம் போன்றவற்றுக்கு அவர் தொடர்ந்து 4 தினங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது, ஆளணிப்பற்றாக்குறை சம்மந்தமாகவும் ஆட்களை நியமிப்பது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். இன்றைய விஜயத்தின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கருணாகரன், ஆரிப்சம்சுதீன் மற்றும் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.சலீம் முதலமைச்சின் காரியாலய அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர். 








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -