ஜ.நா. மனித உரிமை பிரேரணையின் அறிக்கை 260 பக்கங்கள்..!

அஸ்ரப் ஏ சமத்-
ற்போதைய ஜ.நா. மனித உரிமை பிரேரணையி அறிக்கை 260 பக்கங்கள் கொண்டது. இந்த பிரேரனையில் தமிழ் முஸ்லீம் சிங்கள எவா் பாதிக்கப்பட்டிருந்தாலும் இதில் நிவாரணம் கிடைக்கும். பிரதி வெளிநாட்டு அமைச்சா் கலாநிதி ஹா்சா டி சில்வா தெரிவிப்பு 

கொழும்பு -05 தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளா்களுக்கு ஜெனிவா பிரேரனைகளின் பின்னா் ” என்ற தலைப்பில் நேற்று 12ஆம் திகதி கருத்தரங்கொன்று நடைபெற்றது. 

இத்துறை சாா்ந்த அரச சாா்பான இலங்கை ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தினை் தலைவா் சட்டத்தரணி ரவி ஜெயவா்த்தன சிரேஸ்ட சட்டத்தரணி வெலி அமுன மற்றும் வெளிநாட்டு பிரதியமைச்சா் கலாநிதி ஹா்சா டி சில்வாவும் கலந்து கொண்டு மேற்படி தலைப்பில் உரையாற்றினாா்கள்.

பிரதியமைச்சா் தொடா்ந்து உரையாற்றுகையில் 

இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் விவாதித்த பின்னா் பாராளுமன்ற அனுமதி பெறப்படும். இதில் ரீ.என்.ஏ, சிகல உருமைய ,ஜ.தே.கட்சி , ஜே.வி.பி ஸ்ரீ.ல.சு.கட்சிகளின் தலைவா்களது கருத்துக்களும் பெறப்படும். இந்த பிரச்சினை ஒர் இனத்திற்கோ, ஒரு சமுகத்திற்கோ தொடர்புபட்ட பிரச்சினை அல்ல. உண்மையை கண்டறியும் நடவடிக்கையாகும் மேலும் எமது நாட்டில் மத நல்லிணக்க தலைவா்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும்.

இங்கு உரையாற்றிய சிரேஸ்ட சட்டத்தரணி வெலிஅமுன .

ஜக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு இலங்கை பற்றி தயாரித்து அனுப்பியுள்ள ஜெனிவா பிரேரணை - 260 பக்கங்களையும் 1200 பந்திகளையும் கொண்டது. 

இதில் தமிழ் சிங்களம், முஸ்லீம் என்று இல்லாமால் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் நிவாரணம் உண்டு. இதை வைத்துக் கொண்டு இதனை சரியாக வாசிக்க முடியாத ஒரு சிலா் இது ஏதோ இலங்கையில் உள்ள சகல இராணுவத்தாரையும் இரும்புக் கதிரைக்கு கொண்டு தண்டனை பெற்றுக் கொள்வது போன்று இந்த நாட்டில் விசமக் கதைகளை பரப்புகின்றனா். இந்த அறிக்கையை அவா்கள் ஒவ்வொரு பந்தி , பந்தியாக வாசித்தால் அவா்களுக்கு புரியும். இதில் பாரிய விடயங்கள் ஒன்றும் இல்லை. அத்துடன் இந்த நாட்டில் மனித் உரிமைச் சட்டங்களில் நமக்கு பாரிய விழிப்புணா்வுகள் ஏற்படும்.அதனை முறையாக தொடர நாம் பழக்கப்படுவோம் . 

இந்த நாட்டில் நாம் பரம் பரம்பரையாக வெளிநாட்டவா்கள் தயாரித்த சட்ட திட்டங்கைளைத்தான் பின்பற்றுகின்றோம். நாம் பின்பற்று வங்கி முறை கூட நமது பொளத்த சட்ட முறை அல்ல. இங்கிலாந்து வங்கி முறையையே பின்பற்றுகின்றோம். 1977ஆம் ஆண்டு சாதாரண தொழிலாளா்களுக்கு அநீதி இழைத்தால் தொழில் நீதி மன்றம் நிறுவப்பட்டது. அப்போது கூட இதனையும் எமது பௌத்த குருக்கள் எதிா்ததாா்கள். இப்பொழுது அந்த நீதியின் பலனை எமது சாதாரண தொழிலாளி அனுபவிக்கின்றனா். 

வணிக நீதி மன்றம் வெளிநாட்டவா்களது இருந்து வந்த சட்ட திட்டமே அதனையே நாம் பின்பற்றி வருகின்றோம். ஆகவே தான் கைபிரைட் நீதிபதிகள் கலந்து இருப்பதில் நமக்கு என்ன பிரச்சினை இருக்கின்றது.? முன்னாள் பிரதமா் எஸ.டபிள்யு பண்டாரநாயக்க சுட்டுக் கொன்றபோது அப்போது வெளிநாட்டு ரோம் நாட்டின் இரண்டு நீதிபதிகளும் உள்நாட்டு ஒரு நீதிபதியை இணைந்தே நாம் அப்போதைய சிறிமா பண்டாரநயாக்கவுக்கு ஆணைக்குழு அமைத்து அறிக்கையை பெற்றுக் கொண்டாா். 

எல்.எல். ஆர்.சி யில் உள்ள வற்றில் 10 வீதமாவது இந்த நாட்டில் விசாரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீா்வு அல்லது புனா்ருத்தாபணம் நஸ்ட ஈடு கொடுக்கப்பட்டதா ? முன்னாள் ஜனாதிபதி மகிந்தவும் - கேபி ஆனான் தயாரிக்கப்பட்ட அறிக்கை அதன் பின் மனித உரிமை விடயத்தில் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிதிபதிகள் ஆனைக்குழுவை இங்கு வர அனுமதிக்கப்பட்டதா ? இதனை அவா்கள் அன்று அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்தப் பிரச்சினைகள் இவ்வளவு மட்டத்துக்கு சென்றிருக்காது ?

யுத்தத்தினால் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் வெளிநாட்டு நீதிபதிகள் குழு சாதாரண இரானுவத்தினரை அழைத்து விசாரணை செய்வதில்லை. அவா்களிடம் சட்டலைட் படக் காட்சிகள் இருந்திருக்கும். இந்த நவீன உலகில் அதனை அவா்கள் யுத்த காலத்தில் பெற்றிருக்கலாம். இவைகள் தான் சாட்சிகளாக இருக்கும். 

இறுதிக் கட்ட யுத்ததின் பின்னரும் அதற்கு அண்மித்த காலத்திலும் இடம்பெற்ற ஊடகவியலாளா் கொலை நீதித்துறை சுதந்திரம் பாதுகாக்கப்படாமை. மத ஸ்தலங்கள் தாக்கப்பட்டபோது உரிய விசாரணைகள் தண்டனைகள் பெறப்படாமை போன்ற விடயங்களும் இதில் அடங்கப்பட்டுள்ளன. 

இவ்வாறான பிரேறணை தென்அபீரிக்காவில் நடைபெற்ற இன நிற வண்முறை காலத்தில் நெல்சன் மன்டலேவாவினால் முன்னெடுக்கபட்டு அந்த நாடு தற்பொழுது உரிய அரசியல் தீா்வு பெற்று மிகச் சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகின்றது. 

நமது நாட்டில் நடைபெற்ற உண்மையை மறைக்க முற்பட்ட பல நாடுகள் இன்னும் பின்னடைந்து காணப்படுகின்றன. ஆனால் உரிய குற்றவாளிகள் சர்வதேச நிதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு தண்டிக்கப்பட்ட வரலாறும் இல்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -