இலஞ்ச ஆனைக்குழுவினால் முதல் தடவையாக பாரிய முற்றுகை இலங்கை சுங்கத்திணைக்களத்தில் பிரதிப்பணிப்பாளா் உட்பட மேலும் 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா. பஞ்சிகாவத்தையில் ஒரு நிறுவத்தின் 125 மில்லியன் ருபா லஞ்சம் பெற்று அது பாரிமாறும்போதே இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் பொலிசாா் முற்றுகையிட்டு இவா்களை கைது செய்துள்ளனா்.
ரத்மலானையில் வசிக்கும் சுங்க அதிகாரி விக்கிரம ஜினதாச, பிரதி சுங்க பணிப்பாளா் குணதிலக்க, சுங்க அதிகாரி உபாலி குணரத்தின ஆகியோா் கைது செய்யப்பட்டனா் இதில் முக்கிய புள்ளி இருவரை பொலிசாா் வலை விரித்துள்ளனா். இவா்களை கைதுசெய்வதற்கு உதவிய வா்த்தகா் எமக்கு பெரிதும் உதவினாா். இவா்கள் கொடுக்கப்பட்ட பணம் இலக்கம், மற்றும் அப் பணம் வங்கி பரிமாரப்பட்ட தரகா் விதம், மேலும் பணம் கேட்ட விதம் பற்றி வா்த்தகா் எமக்கு உதவினாா் அதே போன்று இவ் வா்த்தகா் நீதிமன்றத்தில் வாய்மொழி அளிப்பதற்கு இணங்கியுள்ளா்.
இலங்கைக்கு சுங்கத்திணைக்களத்தினால் வரும் வருமானத்தினை பெரும் தொகையாக எவ்வாறு சூரையாடியுள்ளாா். என்பது நாட்டு மக்களுக்கு தெரிவிகக்ப்படும். இவா்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜா் செய்யப்பட்டு கைது செய்யப்ட்டுள்ளனா். என இலஞ்ச ஆணைக்குழ ஆணையாளா் தெரிவித்தாா்