பதுளையில் தொடரும் மழை 46 பேர் இடம்பெயர்வு..!

க.கிஷாந்தன்-
வா மாகாணம் பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மடுல்சீமை தேவால ஆறு 15.10.2015 அன்று பெருக்கெடுத்ததினால் மஹதோவ தோட்டத்திலுள்ள 12 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் 46 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இடைவிடாது பெய்துவரும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முனங்கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மஹதோவ தோட்டத்திற்கு அண்மித்து அமைந்துள்ள தேவால ஆறு நேற்று மாலை பெருக்கெடுத்துள்ளது.அந்த ஆற்றிற்கு அருகில் அமைந்துள்ள 12 வீடுகள் வெள்ளித்தில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக 46 பேர் இடம்பெயர்ந்து, தற்போது மஹதோவ வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மண்சரிவு மற்றும் பாரிய கற்கள் புரள்வுகள் இடம்பெற்றுள்ளதால் பஸரை – மடுல்சீமை பிரதான வீதியின் 7ஆவது மைல்கல் பகுதியுடான போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து பெக்கோ இயந்திர உதவியுடன் கற்பாரைகள் அகற்றப்பட்டு, பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேபோன்று 14.10.2015 அன்று 80 தொடக்கம் 110 மில்லிமீற்றராக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, இந்த மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்றும் எதிர்வு கூறியுள்ளது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -