பதுளை நகரில் 5000 ரூபா பெறுமதியுடைய 71 போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது..!

க.கிஷாந்தன்-
வா மாகாணம் பதுளை மாவட்டத்தில் பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை நகரில் 5000 ரூபா பெறுமதியுடைய 71 போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் பதுளை பொலிஸாரினால் 16.10.2015 இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த இரகசிய தகவலொன்றின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரிடமிருந்து 100 அமெரிக்க டொலர் பெறுமதியுடைய 20 நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தப் போலி நாணயத்தாள்களுடன் 48 வயதான ராகலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -