அட்டாளைச்சேனையில் இன்று 50,000kg க்கும் மேற்பட்ட கீரி மீன்கள் சிக்கின..!

அபுஅலா -
ம்பாறை, அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை கடற்கரை பிரதேசத்தில் சுமார் 50 ஆயிரம் கிலோக்கு மேற்பட்ட கீரி மீன்கள் இன்று (14) மதியம் கரவலைகளில் சிக்கின.

இதில் அட்டாளைச்சேனை 8 ஆம் பிரிவைச் சேர்ந்த வெள்ளத்தம்பி ஹாஜியார் என்பரின் கரைவலையில் சுமார் 25 ஆயிரம் கிலோக்கு மேற்பட்ட கீரி மீன்கள் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கடந்த ஒரு வாரகாலமாக கரவலையில் மீன்கள் சிக்கிவருவதனால் பொதுமக்கள் அச்சம் கொண்டு காணப்படுகின்றனர். கடந்த காலம் சுனாமி அனர்த்தம் ஏற்படும் முன்னர் இவ்வாறுதான் கரவலைகளில் மிகக் கூடுதலான மீன்கள் பிடிபட்டு வந்ததாகவும், பின்னர் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதாகவும் பொதுமக்களும் கடல் மீன்பிடிப்பாளர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -