எம்.வை.அமீர்-
அண்மையில் வெளியிடப்பட்ட 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீ்ட்சை முடிவுகளின்படி கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலிருந்து 96 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
இப்பரீட்சைக்கு 104 மாணவ மாணவிகள் தோற்றியிருந்தனர். 2010 ஆம் ஆண்டு மர்ஜுனா ஏ காதர் கல்லூரி அதிபராக இருந்த காலத்தில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்றப் அவர்களின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மபகாண கல்விப் பணிப்பாளராக தற்போது இருக்கும் எம்.ரீ.ஏ.நிஸாம் அவர்களின் அனுமதியுடன் இக் கல்லூரியில் ஆரம்ப பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.
\
இக்கல்லூரி கல்வி அமைச்சினால் 1000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டதால் படிப்படியாக ஆரம்ப பிரிவினை 2016 ஆம் ஆண்டுடன் நிறுத்த வேண்டிய பணிப்புரை வழங்கப்பட்டதற்கிணங்க இவ்வருடத்துடன் ஆரம்ப பிரிவினை நிறுத்த வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.
இருந்தும் மீண்டும் ஆரம்ப பிரிவினை ஆரம்பிக்குமாறு பெற்றோர்களும் நலன் விரும்பிகளும் பாடசாலை அதிபருக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற 5 அம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அரசாங்கத்தால் வழங்கப்படும் உபகார நிதியினை பெறுவதற்காக 6 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மைசான் அஹமட் மஹ்ரூஸ் ( 161 ) ,
அச்சி மஹம்மட் அப்துல்லா ஹம்தி ( 160 ) ,
ஜாஸிர் முஹம்மட் முஸாப் ( 157 ) ,
சூர்டீன் அஹமட் றஸா ஹாரித் ( 155 ) ,
லத்தீப் முஹம்மட் சாத் ( 153) ,
அல் அமீன் அஸ்லப் சிமால் (152)
ஆகிய மாணவர்களே தெரிவு செய்யப்பட்ட மாணவர்களாகும்.
இவ்வாறான பரீட்சை முடிவுகளை பெறுவதற்கு காரணமாக அமைந்த ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர் ஏ.ஆர்.எம்.யுசுப் , வலய அதிபர் எம்.எஸ்.முஹம்மட் , கற்பித்த அசிரியர்கள் அனைவருக்கும் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் உள்ளிட்ட ஆசிரியர்கள் , பழைய மாணவர் சங்கம் , பாடசாலை அபவிருத்திச் சங்கம் மற்றும்பெற்றோர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்